கோவில்களுக்கு முக்கியத்துவம்.. முதல்வர் ஸ்டாலினின் அடுத்தடுத்த உத்தரவுகள்! விமர்சனங்களுக்கு பதிலடி
இந்து கோயில்கள் தொடர்பாக திமுக அரசு முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறது
சென்னை: இந்து கோயில்கள் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை, திமுக அரசு ஒவ்வொன்றாக களைந்து வருகிறது.. மாறாக, அந்த இந்து சமய அறநிலையத்துறையில் புது புது அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.. அந்த வகையில், இப்போதும் ஒரு குட் நியூஸ் சொல்லி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்..!
திமுக ஆட்சியில், முதல்வர் ஸ்டாலினின் இந்து கோயில்கள் தொடர்பான நடவடிக்கைகள் வரவேற்பை பெற்று வருகிறது..
அதேபோல, சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையில் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

பராமரிப்பு
அனைத்து முக்கிய திருக்கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், திருக்கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், பிற ஆலோசனைகளை வழங்குவதற்கும், ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் நியமனமும் இந்த ஆட்சியில் செய்யப்பட்டனர்.

திருக்கோயில்
2 நாட்களுக்கு முன்புகூட, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு 23 கோடியே 81 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதானக்கூடம், மின்தூக்கி மற்றும் நாதமணி மண்டபம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்திருந்தார்.

பாராட்டுக்கள்
இந்து கோயில் தொடர்பான நடவடிக்கைகளில், திமுகவின் செயல்பாடுகளை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.. குறிப்பாக தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பிரத்யேகமாக பாராட்டியிருந்தார்.. 'நம்முடைய அறநிலையத் துறை எப்போதுமே நம்முடைய பாராட்டுதலுக்குரிய முதல்வர் அவர்களின் ஆட்சியின் கீழ், செவ்வனே செயல்பட்டு வருகிறது.. துறையின் வெளிப்படைத் தன்மை, திருக்கோயில்களின் நிருவாகத்தை வெளிப்படைத் தன்மைக்கு உட்படுத்தியிருப்பது, பல நல்ல திட்டங்களை, பக்தர்களுக்கு மேம்படுத்தக்கூடிய வசதிகளை உருவாக்கியிருப்பது இவையெல்லாம் வரவேற்பிற்குரியது" என்று கூறியிருந்தார்.

பாராட்டு
அதேபோல, சொற்பொழிவாளர் சுகி சிவமும் முதல்வரை பாராட்டியிருந்தார்.. "நீண்ட காலத்திற்குப் பிறகு முதல்வருடைய நேர் பார்வையில் அறநிலையத் துறை சீரமைக்கப்படுவது ஒரு பெரிய வெற்றி என்று சொல்ல வேண்டும்... காரணம், அந்தந்த அமைச்சரிடத்தில் விட்டுவிட்டு, முதலமைச்சர்கள் இதை முழுமையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்தத் துறையினால், எந்தக் கெட்ட பெயரும் வந்துவிடக் கூடாது என்பதில் முதலமைச்சர் அவர்கள் மிகுந்த அக்கறையோடு செயல்படுகிறார்" என்று தெரிவித்திருந்தார்.

பாஜக
எனினும் எதிர்க்கட்சிகள் திமுகவை விமர்சித்து கொண்டே இருக்கின்றன.. குறிப்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, திமுக இந்துமதத்துக்கு எதிரி, துரோகி, முக ஸ்டாலின் நமது பண்பாட்டுக்கும் கலாசாரத்துக்கும் எதிரி'' என்று செல்லுமிடமெல்லாம் பேட்டியில் விமர்சித்து கொண்டே இருக்கிறார்.. இந்து மதத்தின் பண்பாடு கலாசாரம் ஆகியவற்றை யாரேனும் கொச்சைப்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்து வருகிறார்..

இந்து விரோத ஸ்டாலின்
அதுமட்டுமல்ல, கோயில் நிலத்தைக் காப்பாற்றாமல் கொள்ளை அடிக்கும் துறை தான் அறநிலையத் துறை... இந்து விரோத ஸ்டாலின் அரசு ஒவ்வொரு நாளும் இந்து கோயில்களை எடுக்க வேண்டுமென மிரட்டுகிறது என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதுபோலவே பாஜகவின் காயத்ரி ரகுராமும், திமுக இந்து விரோத கட்சி என்று விடாமல் விமர்சித்து வருகிறார்.

விமர்சனம்
இப்படிப்பட்ட சூழலில், இந்து மத ஆன்மீக சொற்பொழிவாளர்களே திமுகவை விமர்சித்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.. இந்து மதத்துக்கு திமுக நிறைகளையும் மட்டும் காதில் கேட்டுக் கொள்ளாமல், குறைகளையும் கேட்டு, அந்த குறைகளை களையக்கூடிய நடவடிக்கைகளை எடுத்து வருவதை மக்களும் கவனித்து வருகிறார்கள்.. கோயில் என்றாலே ஆன்மீகம், பக்தி, சாமி கும்பிடுவது மட்டுமின்றி, மனிதனின் வளர்ச்சிக்கு வித்திடக்கூடிய, கலைகளின் வளர்ச்சியிடமாக அமையக்கூடியதாக உள்ளது.. அத்தகைய சிறப்புக்கு திமுக அரசு முழு முயற்சி எடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கருத்துக்கள் கூறப்படுகின்றன.

கும்பாபிஷேகம்
இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு முக்கிய அறிவிப்பாக, மீனாட்சி அம்மன் கோயிலில் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம், மதுரையில் ரூ.49.74 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.51.77 கோடி மதிப்பு புதிய திட்டங்களையும், மக்கள் நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்... இதை பற்றி ஸ்டாலின் பேசும்போது, "சங்க கால நகராக இருந்து மதுரையை, நவீன மதுரையாக திமுக அரசு மாற்றியது..

மீனாட்சி கோயில்
ரூ.25 கோடியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். 2 ஆண்டுகளில் மீனாட்சி கோயிலுக்கு குடமுழுக்கு ஏற்படுத்தப்படும்" என்று அறிவித்துள்ளார்.. எதிர்க்கட்சிகள் என்னதான் குறைகளை சொல்லி கொண்டிருந்தாலும், அவைகளை நிறைகளாக மாற்றி, சம்பந்தப்பட்ட துறையை திரும்பி பார்த்து வைத்து வருகிறது திமுக அரசு..!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications