Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குமுதம் வார இதழ் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மாரடைப்பால் காலமானார்! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூத்த பத்திரிகையாளரான குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் (வயது 56) இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகை உலகம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. ப்ரியா கல்யாணராமன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

குமுதம் வார இதழில் பல ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியவர் ப்ரியா கல்யாணராமன். இவரது இயற்பெயர் ராமச்சந்திரன். நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலைச் சேர்ந்தவர் ப்ரியா கல்யாணராமன். அவரது மனைவி ராஜ சியாமளா ஒரு எழுத்தாளர். ப்ரியா கல்யாணராமனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். குமுதம் வார இதழில் தமது 21 வயதிலேயே பத்திரிகையாளராக வாழ்க்கையை தொடங்கினார். குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி.யால் பத்திரிகை உலகத்துக்கு அடையாளம் காட்டப்பட்டவர் ப்ரியா கல்யாணராமன்.

Kumudam Editor Priya Kalyanaraman passes away

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஏராளமான நாவல்களை எழுதிக் குவித்தவர் ப்ரியா கல்யாணராமன். குமுதத்தில் பல தொடர்களை நீண்டகாலம் எழுதியவர். ஆன்மீக துறையில் பல நூல்களை எழுதியிருக்கிறார். ப்ரியா கல்யாண ராமன் எழுதிய சிறுகதைகள், நாவல்கள் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்களுக்கு நேரில் சென்று அதன் சிறப்புகளை எழுதியவர்கள் ஒருசிலர்தான். அவர்களில் ப்ரியா கல்யாணராமனும் ஒருவர்.

கடந்த 30 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து திகழ்ந்த ப்ரியா கல்யாணராமன் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார். ப்ரியா கல்யாணராமன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், ஆன்மீக பிரமுகர்கள் மற்றும் பத்திரிகை உலகம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது.

Kumudam Editor Priya Kalyanaraman passes away

ப்ரியா கல்யாண ராமன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல்:

மூத்த ஊடகவியலாளரும் குமுதம் வார இதழின் ஆசிரியருமான ப்ரியா கல்யாணராமன் என்கிற க.ராமச்சந்திரன் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். 30 ஆண்டுகளாக குமுதம் இதழில் பணியாற்றி வரும் அவர் பல நூல்களை எழுதியிருப்பதுடன் பல எழுத்தாளர்களை ஊக்குவித்தவர்; குமுதம் இதழை காலத்துக்கு ஏற்ப நவீனப்படுத்தியவர். ப்ரியா கல்யாணராமன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.

ப்ரியா கல்யாணராமன் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள இரங்கல்:

குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் (வயது 56) இன்று (22-06-2022) புதன்கிழமை திடீர் மாரடைப்பால் காலமானார்.அனைவருடனும் அன்பாக எளிமையாக பழகக்கூடிய பிரியா கல்யாணராமன் மறைந்தார் என்ற செய்தி தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் இதழியல் உலகில் நீண்ட அனுவபம் கொண்ட பிரியா கல்யாணராமன் ( இயற்பெயர் ராமச்சந்திரன் ) எழுத்துலகிலும் பெரும் சாதனைகள் படைத்தவர்.ஒரே காலகட்டத்தில் 4-5 தொடர்கள் எழுதிய ஆற்றல் மிகுந்தவர்.கொரோனா நோய்த்தொற்று காலத்தில் மருத்துவமனையில் நம் ஊடக உறவுகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனிப்பட்ட வகையில் உதவிகள் செய்தவர் பிரியா கல்யாணராமன். இதழியல் துறையில் பலரை உருவாக்கியவர். பல துறை நுட்பங்களை அழகியலோடு எழுதும் ஆற்றல் மிக்கவர். நெஞ்சத்திற்கு நெருக்கமாக விளங்கிய பிரியா கல்யாணராமன் அவர்கள் மறைவுக்கு பெரும் துயரத்துடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், குமுதம் குழும நண்பர்கள், நண்பர்கள் , உற்றார் உறவினர்கள் என அனைவரோடும் துயரத்தில் பங்கேற்கிறோம். பிரியா கல்யாணராமன் இல்ல முகவரி: 10,A ,ரஜினி ராஜா கோயில் தெரு, ஐந்தாவது சர்க்குலர் சாலை, ஜவஹர் நகர், பெரமபூர்,சென்னை

திமுக செய்தித் தொடர்பாளரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் வெளியிட்டுள்ள இரங்கல்:

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் இன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை கே.என் சிவராமன் பகிர்ந்திருக்கிறார். மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். ஊடக உலகில் என் நெடுநாள் நண்பர். என் எழுத்துக்கள்மீது மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டவர். "மிஸ் யூ" வெளியான சமயத்தில்கூட அதுகுறித்து எனது நீண்ட பேட்டி ஒன்றை உற்சாகத்துடன் குமுதத்தில் வெளியிட்டார். சென்னை புத்தகக் கண்காட்சியில்தான் அவரைக் கடைசியாக சந்தித்தேன். நான்கு நாளைக்கு முன்புதான் தீரா நதி மீண்டும் வெளிவருவது குறித்து அவரிடம் என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். ' உங்களைப்பற்றி தீராநதியில் விரைவில் ஒரு அட்டைப்பட கட்டுரை போடவேண்டும் என்றார். அதுதான் கடைசியாக அவர் குரல் கேட்டது. கண்பார்க்க இன்னும் எவ்வளவு பேர்தான் கண்ணைவிட்டு மறைவீர்கள்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+