Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குன்றத்தூர் அபிராமி, காதலன் சுந்தரத்திற்கு சாகும்வரை ஆயுள் தண்டனை! அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரியாணிக் கடைக்காரர் சுந்தரத்துடனான கள்ளக்காதலுக்காகத் தனது ஒன்றும் அறியாத இரு குழந்தைகளைக் கொன்ற வழக்கில் குன்றத்தூர் அபிராமி குற்றவாளி என்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அது போல் "குழந்தைகளையும் கணவரையும் கொன்றுவிடு" என ஐடியா கொடுத்து தூக்க மாத்திரை வாங்கிக் கொடுத்த 2ஆவது குற்றவாளியும், அபிராமியின் கள்ளக்காதலனுமான பிரியாணி கடை சுந்தரமும் இந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த விஜய்க்கும் அபிராமிக்கும் திருமணம் நடந்தது. விஜய் தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். இதனால், குடும்பத்துடன் அவர் சென்னை புறநகர்ப் பகுதியான குன்றத்தூரில் வாடகை வீடு எடுத்துத் தங்கினார்.

kundrathur abirami court

இவர்களுக்கு அஜய் (7), கார்னிகா (4) ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், 2017, 2018ஆம் ஆண்டுகளில் அபிராமி மியூசிக்கலியில் நிறைய வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ரஜினி ரசிகையான இவர், ரஜினியின் வசனங்களைப் பேசியும் வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.

டிசம்பர் 31, 2018ல் நடந்தது என்ன

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி, பணி அதிகம் இருந்ததால் விஜய் அன்று இரவு அலுவலகத்திலேயே தங்கிவிட்டார். மறுநாள் செப்டம்பர் 1ஆம் தேதி காலை வீட்டுக்கு வந்தபோது கதவு மூடப்பட்டிருந்தது. இதனால், அருகில் உள்ள தனது தாய், தந்தை வீட்டிற்கு அபிராமி சென்றிருக்கலாம் எனக் கருதிய விஜய், தனது மாமியார் வீட்டிற்குச் சென்றார்.

அபிராமி வரவில்லை

அங்கு கேட்டபோது "அபிராமி இங்கு வரவில்லை" எனக் கூறினர். இதையடுத்து மீண்டும் வீட்டுக்கு வந்த விஜய், கதவு திறந்திருப்பதைப் பார்த்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அவருடைய இரு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியவாறு இறந்து கிடந்தனர்.

விஜய் அதிர்ச்சி

இதனால் அதிர்ச்சியடைந்த விஜய், இரு குழந்தைகளையும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர்கள் இருவரும் இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்துக் குன்றத்தூர் போலீஸாரிடம் விஜய் புகார் அளித்திருந்தார்.

பிரேதப் பரிசோதனை

அவர்களது உடல்களை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போதுதான் குன்றத்தூர் போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

பிரியாணிக் கடைக்கு அடிக்கடி

விஜய், தனது குடும்பத்தினருடன் வீட்டருகே இருக்கும் பிரியாணிக் கடைக்குச் சென்று உணவு சாப்பிட்டு வருவாராம். அங்குள்ள பிரியாணி சுவை பிடித்ததால், அபிராமி, தனது கணவர் இல்லாத நேரங்களிலும் கடைக்கு போன் செய்து பிரியாணியை ஆர்டர் செய்வாராம்.

பிரியாணி கடைக்காரர் சுந்தரம்

அப்போது அபிராமியின் வீட்டிற்கு சுந்தரம் என்பவர்தான் பிரியாணியை நேரில் வந்து கொடுப்பது வழக்கமாம். இதனால் அடிக்கடி பிரியாணி வாங்கும் போது சுந்தரத்துடன் அபிராமி நெருங்கிப் பழகியதில் நாளடைவில் அதுவே கள்ளக்காதலாக மாறிவிட்டது.

கண்ணை மறைத்த கள்ளக்காதல்

கள்ளக்காதலனுக்காக அபிராமி, தனது குழந்தை, கணவரை விட்டுவிட்டு சில வாரங்கள் வெளியே சென்றுவிட்டாராம். பின்னர், காதோடு காது வைத்தது போல் அபிராமியை குடும்பத்தினர் தேடி கண்டுபிடித்து, குழந்தையைக் காட்டி மீண்டும் அழைத்து வந்தனராம்.

சுந்தரத்துடன் வாழ விரும்பிய அபிராமி

ஆனால், சுந்தரத்துடன் வாழவே அபிராமிக்கு பிடித்திருந்ததாம். இதனால், மீண்டும் நாம் சுந்தரத்துடன் ஓடிப் போனாலும் குழந்தையைக் காரணம் காட்டி அழைத்து வந்துவிடுவார்களே என்ற அச்சத்தில் இருந்த அபிராமி, அப்போதுதான் குழந்தைகளைக் கொலை செய்ய முடிவு செய்தாராம்.

பாலில் தூக்கமாத்திரை

இதையடுத்து, குழந்தைகளுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு பாலில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்துவிட்டு, பின்னர் அவர்களைத் தலையணையால் அமுக்கி கொன்றுவிட்டு, சுந்தரத்துடன் வீட்டை விட்டு வெளியேறியிருந்தார். இவர் கோயம்பேட்டில் தனது இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு நாகர்கோவிலுக்குத் தப்பிச் சென்றார்.

சிசிடிவி

இதையடுத்து, போலீஸார் கோயம்பேட்டில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அபிராமி நாகர்கோவில் சென்றதை அறிந்து, சுந்தரத்தைக் கைது செய்தனர். அவரிடம் அபிராமிக்கு போன் செய்து "எங்கிருக்கிறார்?" எனக் கேட்கச் சொன்னார்களாம்.

நாகர்கோவிலுக்கு சென்ற அபிராமி

அதன்படி, சுந்தரமும் அபிராமிக்கு போன் செய்து "எங்கிருக்கிறாய்?" எனக் கேட்டபோது, கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாத அபிராமி, நாகர்கோவிலில் இருப்பதாகவும், சுந்தரத்தையும் சீக்கிரம் வருமாறும் கூறினாராம். இதையடுத்து போலீஸார் சுந்தரத்தை அழைத்துக்கொண்டு நாகர்கோவிலுக்குச் சென்றனர்.

அபிராமி கைது

நாகர்கோவிலுக்கு வந்த சுந்தரம், போலீஸார் சொன்னது போல் அபிராமியைத் தொடர்பு கொண்டபோது அவர் இருக்கும் இடத்தைக் கூறினார். இதையடுத்து போலீஸார், சுந்தரத்துடன் சென்று அபிராமியைக் கைது செய்து அழைத்து வந்தனர். இந்த வழக்கில் அபிராமி முதல் குற்றவாளியாகவும், சுந்தரம் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக புழல் சிறையில் இருந்து வருகிறார்கள்.

நீதிபதி தீர்ப்பு

இவர்களது வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் இருந்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், காஞ்சிபுரத்தில் மகிளா நீதிமன்றம், போக்சோ நீதிமன்றம், குடும்ப நீதிமன்றங்களில் நீதிபதிகள் இல்லாததால், இங்கு வரும் வழக்குகளைக் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ப.உ. செம்மல் விசாரித்து வருகிறார்.

அபிராமிக்கு என்ன தீர்ப்பு?

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அபிராமியின் வழக்கு விசாரணை முடிந்து, ஜூலை 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றத்தில் அபிராமி வழக்கு செம்மல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமி குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். குழந்தைகளையும் கணவரையும் கொன்றுவிடு என ஐடியா கொடுத்து தூக்க மாத்திரை வாங்கிக் கொடுத்த அபிராமியின் கள்ளக்காதலன் "பிரியாணி கடை" சுந்தரமும் இந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது வாழ்நாள் முழுவதும் சிறையில்தான் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+