ரஜினி சார் இப்ப என்ன சொல்லிட்டார்.. ஏன் இப்படி அரசியலாக்கறீங்க.. குஷ்பு கேள்வி

ரஜினிகாந்த் பேசியதை ஏன் அரசியலாக்க வேண்டும் என்று குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ரஜினி சார் சொல்றதை ஏன் இப்படி அரசியலாக்கறீங்க? ஒரு குடிமகனாக அவர் கருத்து சொல்ல கூடாதா..?" என்று குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "பாஜகவின் தேர்தல் அறிக்கையில், நாட்டிலுள்ள நதிகளை இணைக்க வேண்டும். அதற்கு ஒரு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருக்காங்க. அது ரொம்ப வரவேற்கத்தக்கது. இப்போது என்ன முடிவு வரப் போகிறது என்று தெரியாது.

Kushboo comment on Actor Rajnikanths statement

நதிகளை எல்லாம் இணைத்து விட்டாலே நாட்டில் பாதி வறுமை ஒழியும். ஒரு வேளை மத்தியில் ஆட்சி அமைத்தால், முதலில் இந்த நாட்டின் நதிகளை இணைக்க வேண்டும்" என்றார்.

ரஜினியின் இந்த பேச்சு பாஜகவுக்கு ஆதரவு தருவது போல இருப்பதாக கருத்துக்கள் எழ ஆரம்பித்தன. இந்நிலையில், இது சம்பந்தமாக குஷ்பு தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், "பாஜக தேர்தல் அறிக்கையை சம்பந்தமாக ரஜினி சார் கூறியதை வைத்து ஏன் ஊடகங்கள் இவ்வளவு சப்தம் எழுப்புகின்றன என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நதிகள் இணைப்பு பற்றி ஒரு வார்த்தை பேசியுள்ளார்... அதனால் என்ன? ஒரு குடிமகனாக இந்த கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இல்லையா என்ன? அதை ஏன் அரசியலாக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+