யாரிடமும் சிக்காத.. குஷ்புவையே வீழ்த்திய பாஜக.. பலமான வலை.. அடுத்து யாரெல்லாம்?.. மிரட்சியில் திமுக!
திமுக, காங்கிரஸ் தங்கள் வியூகத்தை இன்னும் பலமாக்க வேண்டி உள்ளது
சென்னை: பாஜகவின் பலமான வலைவீச்சில், யாரிடமும் சிக்காத குஷ்புவே வீழ்ந்த அதிசயம் இன்று நடந்துள்ளது.. இது பல தமிழக கட்சிகளுக்கு அடிக்கும் எச்சரிக்கை அலார்ம் ஆகும்!
இந்திரா காந்தி காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசல்களை யாராலும் சமாளிக்க முடியவில்லை.. ஆளுக்கு ஒரு கோஷ்டியை வைத்து கொண்டுள்ளதால் அக்கட்சி விவகாரம் வெடித்தபடியே இருக்கிறது.
ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், உடனே டெல்லிக்கே ஃபிளைட் பிடித்து கொண்டு போய்விடுவதுடன், தங்களுக்கு நெருக்கமான தலைவர்களிடம் உட்கார்ந்து பேசி காரியத்தையோ, பிரச்சனையையோ சரி செய்து கொண்டு வருவார்கள். இப்படித்தான், இதில் குஷ்புவும் சிக்கினார்.

அரசியல்
ஆரம்பத்தில் இருந்தே எம்எல்ஏ, எம்பி சீட்டுக்கு குறி வைத்துதான் குஷ்பு அரசியலுக்குள் நுழைந்தார்.. திமுகவில் எதிர்பார்த்த சீட் கிடைக்கவில்லை.. அதனால், காங்கிரசுக்கு போனார்.. இவரை மாநில காங்கிரஸ் தலைமை பதவிக்கு ஈவிகேஎஸ் போன்றோர் எவ்வளவோ முயற்சித்தும் நடக்காமல் போயிற்று.. எம்பி தேர்தலில் சீட் தந்தால் நிற்பேன் என்று பூடகமாக தன் ஆசையை சொல்லியும், காங்கிரஸ் சீட் தரவில்லை.

கமலாலயம்
இதைதான் பாஜக சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளது.. 2 மாசத்துக்கு முன்பு, பாஜகவின் கல்யாணராமன், "விரைவில் குஷ்பூ சுந்தரை கமலாலயத்தில் எதிர்பார்க்கலாம்" என்று ஒரு ட்வீட் போட்டிருந்தபோது, இதை யாருமே அப்போது பெரிதாக கண்டுகொள்ளவில்லை.. அத்துடன் பாஜக எப்போதுமே இப்படி ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதால், இது பெரிதுப்படுத்தப்படவில்லை.

அண்ணாமலை
இதற்கு பிறகு பாஜகவின் அண்ணாமலை, "குஷ்பு தைரியமானவர்.. பாஜகவுக்கு கட்டாயம் வரணும்" என்றபோதும் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை.. இறுதியில், குஷ்பு வந்தால் நிச்சயம் வரவேற்போம் என்று எல். முருகன் வெளிப்படையாக அழைப்பு விடுத்தும், இந்த விஷயத்தின் சீரியஸ்தன்மை காங்கிரசுக்கும் தெரியவில்லை.. முக்கியமாக திமுகவுக்கும் தெரியவில்லை.

படு தீவிரம்
இன்று கனகச்சிதமாக காரியத்தை முடித்துவிட்டது பாஜக... இப்படி ஆட்களை பிடிப்பது குறித்து பல மாதங்களாகவே பேசப்பட்டு வந்தும், எந்த கட்சியும் இதைபற்றி கவலைப்படாமல் உள்ளன... பாஜகவில் குஷ்பு இணைவதின் மூலம் 2 விஷயங்களை நாம் புரிந்து கொள்ளலாம். ஒன்று, பாஜக ஆள் பிடிப்பதில் படு தீவிரமாக இருக்கிறது என்பதை குஷ்பு நிரூபித்துள்ளார்..

சலசலப்புகள்
காரணம், யாரும் கனவில் கூட நினைத்து பார்க்காத நபர் குஷ்பு... எத்தனையோ முறை பாஜகவின் சலசலப்புகளுக்கு நறுக்கென பதில் கொடுத்து கொண்டிருந்த குஷ்புவே பாஜகவிடம் வீழ்ந்திருக்கிறார் என்றால் பாஜகவின் வலைவீச்சு எந்த அளவுக்கு பலமாக இருக்கிறது என்று நினைத்து பார்க்க வேண்டும்.

அதிருப்தி
இது நாளை திமுக பக்கமும் திரும்பும்... குஷ்புவை விட மிக மிக பலவீனமான பல பெரும் தலைர்கள் திமுகவில்உள்ளனர்... அத்தனை பேரையும் மொத்தமாக அள்ளிக் கொண்டு போகும் வாய்ப்பு கண்டிப்பாக நடக்கும்.. ஏனென்றால், திமுகவில் நிறைய அதிருப்தி தலைவர்கள் உள்ளனர்.. பலர் பொருமலில் தவித்து வரும்போது, பாஜக அவர்களுக்கும் குறி வைக்கும்.. விபி துரைசாமி, இன்னும் பலர் திமுகவில் இருந்து பாஜகவுக்கு வர உள்ளதாக ஏற்கனவே சொல்லி இருந்ததையும் நினைவுகூர வேண்டி உள்ளது. அதனால், பாஜகவை போலவே திமுகவும், மெகா வலையை வீச வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி உள்ளது.

பெரிய பலவீனம்
அதேபோல, காங்கிரசுக்கு இது மிகப்பெரிய பலவீனம் ஆகும்.. ஒற்றுமை இல்லாமலும், கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களை சரி செய்ய முடியாமலும் இருந்தால், இப்படித்தான் மாற்று கட்சிக்கு தாவுவார்கள் என்பதை குஷ்புவின் நடவடிக்கை உதாரணமாகி இருக்கிறது.. இனியாவது, அந்த கட்சி தன் பலவீனத்தை துடைத்தெறிய முன்வர வேண்டும்.. ஒரு தேசிய கட்சியாக இருந்தும், இன்னும் தனித்து போட்டியிட துணிவற்று நிற்கும் நிலையில், இந்த மாதிரியான கட்சி தாவல்கள் மேலும் கெட்ட பெயரைதான் அக்கட்சிக்கு ஏற்படுத்தும்.

அதிர்ச்சிகள்
அதனால், வட மாநிலங்களில், கர்நாடகத்தில் என்ன நடந்ததோ அதுதான் இன்று தமிழகத்தில் நடக்க ஆரம்பித்திருக்கிறது... தேர்தல் காலம் நெருங்க நெருங்க இன்னும் பல அதிர்ச்சிகள் நடக்கும் வாய்ப்பையும் மறுக்க முடியாது... மகட்சிகள் உஷாராகிக் கொள்ள வேண்டிய கட்டாய சூழல் நெருங்கி விட்டது.. காரணம் பாஜக படு வேகமாக செயல்பட ஆரம்பித்து விட்டது... ஆனால் மக்கள் இதற்கு எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதை தேர்தலுக்குப் பிறகுதான் தெரிந்து கொள்ள முடியும்.. அதுவரை டிவி சீரியல் போல இது தொடர்ந்து கொண்டிருக்கும்.












Click it and Unblock the Notifications