"அம்மா.. அம்மா".. என்ன திடீர்ன்னு குஷ்பு இப்படி களமிறங்கிட்டாங்க.. நம்ப முடியலையே! பெரிய திட்டமோ!?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வரும் குஷ்பு.. தற்போது திடீரென புதிய பிரச்சார பாணி ஒன்றை கையில் எடுத்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டியிடுகிறார். இவருக்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்த நிலையில் கடைசி கட்டத்தில் குஷ்புவிற்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் வாய்ப்பு கிடைத்தது.
திமுகவில் இருந்து பாஜகவிற்கு சென்ற ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கு.க செலவத்திற்கு வாய்ப்பு கொடுப்பதற்கு பதிலாக குஷ்புவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

எப்படி
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் குஷ்பு சமீப நாட்களாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி வருகிறார். பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் ஜெயலலிதா பற்றி பேசி வருகிறார். சென்னையில் பெண்கள் இடையே ஜெயலலிதாவிற்கு பெரிய அளவில் மதிப்பு இருக்கிறது.

இறப்பு
இறப்பிற்கு பின்பும் ஜெயலலிதா மிக முக்கியமான தலைவராக மதிக்கப்படுகிறார். மக்கள் மத்தியில் இவருக்கான பெயர், புகழ் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இந்த புகழை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக குஷ்பு தொடர்ந்து ஜெயலலிதா குறித்து பல்வேறு இடங்களில் பேசி வருகிறார்.

ஜெயலலிதா
ஏன் குஷ்புவிற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் போஸ்டர்களில் கூட ஜெயலலிதா புகைப்படம்தான் அதிகம் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி, அமித் ஷா புகைப்படங்கள் கூட இடம்பெறாமல் ஜெயலலிதா புகைப்படங்கள்தான் குஷ்புவின் போஸ்டரில் அதிகம் இடம்பெற்றுள்ளது. ஜெயலலிதாவை மையப்படுத்தியே போஸ்டர்கள் அடங்கி உள்ளது.

ஜெயலலிதா
குஷ்புபின் சமீபத்திய பேச்சுக்கள் கூட ஜெயலலிதா பற்றியே உள்ளது. நேற்றும் கூட ஜெயலலிதா குறித்து பேசிய குஷ்பு, தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சிதான் நடக்கிறது. ஜெயலலிதாவிற்கு நேர்ந்த துயரங்கள், அவமானங்கள் எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது.

சவால்கள்
அதேபோன்ற சவால்களை நானும் சாதித்து வருகிறேன். தமிழக அரசியலில் பெண் அரசியல்வாதிகளில் முக்கியமானவராக திகழ்ந்தவர் ஜெயலலிதா என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார். திடீரென ஜெயலலிதா குறித்து குஷ்பு புகழ்ந்து பேச தொடங்கி உள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதியில் இருக்கும் ஜெ ஆதரவாளர்களை தன் பக்கம் கொண்டு வரும் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.

குஷ்பு
அதிமுகவினரே பெரிய அளவில் ஜெயலலிதா குறித்து பேசாத நிலையில் தற்போது குஷ்பு பல இடங்களில் ஜெயலலிதாவின் புகழை பாடி வருகிறார். தமிழக அரசியலில் பெண் தலைவர்களுக்கான வெற்றிடம் இருப்பதாக குஷ்பு நினைக்கிறார். இதை எப்படியாவது நிரப்பி விடலாம் என்ற திட்டத்தில் தற்போது குஷ்பு தேர்தல் களத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.

நம்ப முடியவில்லை
பாஜகவினர் பலரும் இதேபோல் ஜெயலலிதா குறித்து பாராட்டி பேச தொடங்கி உள்ளனர். பாஜகவின் இந்த சமீபத்திய பிரச்சார மூவ் கொஞ்சம் நம்ப முடியாத வகையில் இருந்தாலும்.. எப்படியாவது ஜெயலலிதா ஆதரவு வாக்குகளை தங்கள் பக்கம் கொண்டு வரலாம். எதிர்காலத்தில் பாஜகவிற்கு இது உதவும் என்று அக்கட்சி வட்டாரங்கள் நம்புகிறாதாம் .
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications