அரசு பணியாளர் நியமனத்தில் ஊழல்.. ஒன்றுமே தெரியாதது போல் அமைச்சர்! சிபிஐ விசாரணை கேட்கும் எல்.முருகன்
சென்னை: நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்களில் திமுக அரசின் அதிரவைக்கும் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி பல கோடி ரூபாயை சுருட்டியுள்ள திமுகவினர் மீது புகார் எழுந்திருக்கும் நிலையில், தமிழக காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," போலி திராவிட மாடல் திமுக ஆட்சியில் அதிர வைக்கும் ஊழல்கள் தொடர்ந்து அம்பலமாகி அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மணல் கொள்ளை ஊழல், மது விற்பனை ஊழல், குழந்தைகளுக்கு வழங்கும் ஊட்டச் சத்திலும் ஊழல், மின்சாரக் கொள்முதல் ஊழல், கட்டுமான அனுமதி ஊழல், பேருந்து கொள்முதல் ஊழல் என எங்கும், எதிலும் ஊழல்கள்தான்.
ஊழல் வழக்குகளில் சிக்கி திமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் நீதிமன்ற படி ஏறி இறங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்துள்ள மிகப்பெரிய லஞ்ச மோசடி முறைகேடுகள் தற்போது தமிழகத்தை பெரிய அளவில் அதிர வைத்துள்ளது.

தமிழக வேலைவாய்ப்பு ஊழல்
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாகக் கூறப்படும் வேலைவாய்ப்பு ஊழல் தொடர்பாக, அமலாக்கத்துறை முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தத் துறையில் 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமித்ததில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. இதற்கான தகவல்கள் விரிவான அளவில் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது.
நகராட்சி பணி நியமனம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை புறக்கணித்து விட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் குறுக்கு வழியில் பணியாளர்களைத் தேர்வு செய்ததில் பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளது. விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் கைதேர்ந்தவர்களான திமுகவினர், அரசுப் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதிலும் விஞ்ஞான ரீதியில் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். அரசுப் பணி என்ற கனவுடன் இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இந்த செய்தி தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது. அரசு வேலைகளுக்கு பெரிய அளவில் லஞ்சம் வாங்கி பணம் குவிக்கும் திமுகவினர், திறமையுள்ள ஏழை இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைப்பதையும் தடுத்துள்ளனர். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை திமுக அரசு சிதைத்துள்ளது.
திமுக அரசு
பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உழைத்து, படித்து தேர்வு எழுதிவிட்டு தங்களுக்கு விடியல் கிடைக்காதா, அரசு பணி அமையாதா என ஏக்கத்துடன் காத்திருந்த பல லட்சம் இளைஞர்களின் முதுகில் திமுக அரசு குத்தியுள்ளது. நேர்மையான இளைஞர்களின் குடும்பத்தினரையும் கொந்தளிப்பு அடையச் செய்திருக்கிறது. திமுக ஆட்சியில் அரசுப் பணிக்காக நடந்த எந்த ஒரு தேர்வும் நியாயமாக நடத்தப்பட்டுள்ளதா? என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் ஊழலைத் தவிர திமுகவினர் வேறு எதையும் செய்யவில்லை. அப்பாவி மக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
திமுக ஊழல் குற்றச்சாட்டு
இவ்வளவு பெரிய ஊழல் வெட்டவெளிச்சமான பிறகு, அந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் எதுவும் நடைபெறவில்லை என்று ஏதும் அறியாதவர் போன்று விளக்கம் தருகிறார். தமிழகத்தை வேட்டைக்காடாக நினைத்துச் சுரண்டி குவிக்கும் குட்டி ஜமீன்தார்களுக்கு தலைமை ஏற்று மன்னராட்சி நடத்தி வரும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மவுனமாக இருக்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் இந்த பணி நியமனம் ஏன் நடைபெற்றது என்பது குறித்து முதலமைச்சர் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அரசு பணிக்கு லஞ்சம் பெற்றுள்ள புகார் குறித்து வெளிப்படையாக விளக்கம் தர வேண்டும்.
சிபிஐ விசாரணை
நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. அப்படி பெயரளவுக்கு வழக்கு பதிவு செய்தாலும் அது ஊழலை மூடி மறைக்கும் மோசடி நாடகமாகவே அரங்கேறும். தமிழகத்தை அதிர வைக்கும் இந்த பணி நியமன ஊழல் வழக்கைத், தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே திமுக அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications