லட்சுமிக்கு தண்ணி அடிக்காமல் இருக்க முடியாதாம்.. மதுபானம் வாங்க.. எந்த பெண்ணும் செய்ய கூடாத காரியம்
சென்னை: குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதியினர் ஏராளம் உண்டு.. பல வருடங்களாக குழந்தை இல்லாமல் ஏங்கும் தம்பதி, ஒவ்வொரு கோவிலிலும் வேண்டுதல் வைத்து, மருத்துவமனைகளின் வாசல்களில் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். தங்களுடைய வாழ்க்கையை முழுமையாக்கும் என்ற கனவில் தினமும் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். ஆனால், ஆந்திராவில் ஒரு பெண் செய்த காரியத்தை பாருங்க
சில தாய்மார்கள் தங்களது பெற்ற குழந்தைகளையே விற்கும் நிலைமைக்கு ஆளாகிறார்கள்.. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்..

முக்கியமாக கடுமையான வறுமையே அடிப்படை காரணமாக இருக்கிறது. உணவுக்கும், மருத்துவத்திற்கும், குழந்தை வளர்ப்பதற்கான செலவுகளுக்கும் பெற்ற தாய் அஞ்சும் நிலைமை உள்ளது..
குழந்தை விற்கும் தாய்மார்கள்
குடும்ப ஆதரவு இல்லாமை, கணவன் பிரிந்து செல்வது, விவாகரத்து, வேலையின்றிமை, போன்ற காரணங்களும் சம்பந்தப்பட்ட பெண்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்கி தனிமைப்படுத்தும்போது, சமூகத் தடைகள், திருமணத்திற்கு வெளியே குழந்தை பிறந்தால் எதிர்கொள்ளும் அவமானமும் அந்த பெண்ணை மேலும் மன அழுத்தத்திலேயே வைத்து விடுகிறது.. இதன்காரணமாகவே குழந்தைகளை விற்க துணிகிறார்கள்.
சிலசமயம், தாய்மார்களின் மேற்கண்ட பரிதாப சூழலை கருத்தில் கொண்டு, குந்தை விற்கும் கும்பல்கள், பொய்யான வாக்குறுதியுடன் அணுகி அவர்களை ஏமாற்றி குழந்தையை விற்க வைப்பதும் நடக்கிறது..
பணத்துக்காக ஆசைப்பட்டு
கல்வி அறிவு குறைவு மற்றும் சட்ட விழிப்புணர்வு இல்லாமையும் இதற்கு காரணமாகிறது. மனநல பிரச்சனைகள், பிரசவத்துக்கு பிறகு மன அழுத்தம், பயம் போன்றவை கூட தாயின் தீர்மானத்தை முடிவு செய்கின்றன.. பணத்துக்காக ஆசைப்பட்டு பச்சிளம் குழந்தையை விற்கும் தாய்மார்களும் உண்டு..
ஆனால், தெலுங்கானா மாநிலத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது... நிஜாமாபாத் மாவட்டம் எல்லம்மா குட்டா பகுதியை சேர்ந்தவர் பி.ஸ்ரீனிவாஸ். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு இப்போது 2 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
தண்ணி அடிக்கும் லட்சுமி
இவர்களின் குடும்பம் வசதி வாய்ப்பில்லாத குடும்பமாகும்.. ஆனாலும் லட்சுமிக்கு குடிப்பழக்கம் எப்படியோ சேர்ந்து கொண்டது.. இவரால் குடிக்காமல் இருக்கவே முடியாதாம்.. இதனால் தினந்தோறும் குடித்து கொண்டேயிருந்தார்.. ஒருகட்டத்தில் சரக்கு வாங்க லட்சுமியிடம் காசு இல்லை.. இதனால் மது குடிக்க முடியாமல் அவதிப்பட்டார்.. மனநிலை பாதிக்கப்பட்டது போல பிதற்றினார்.
இந்த நேரத்தில்தான், ஐதராபாத்தைச் சேர்ந்த மேட்ரிமோனியல் கம்பெனியுடன் தொடர்புடைய ரமாதேவி மற்றும் மஞ்சுளா என்ற இரு பெண்கள் லட்சுமிக்கு அறிமுகமானார்கள்.. லட்சுமியின் நிலைமையை புரிந்து, அவரது 2 மாத ஆண் குழந்தையை, ரூ.2 லட்சத்திற்கு தருமாறு அந்த பெண்கள் கேட்டுள்ளனர்.. குழந்தையை தந்தால், நிறைய பணம் தருவதாகவும் கூறியிருக்கிறார்கள்..
இரண்டரை லட்சம் பணம்
பணம் கிடைத்தால் எப்போது தண்ணி அடிக்கலாம் என்று காத்து கொண்டிருந்த லட்சுமியும் இதற்கு சம்மதித்துள்ளார்.. பிறகு கணவருக்கு தெரியாமல் குழந்தையுடன் வீட்டை விட்டு தலைமறைவாகிவிட்டார்..
இதனிடையே வீட்டுக்கு வந்து பார்த்த கணவர், லட்சுமியையும், குழந்தையையும் காணாமல் பதறிப்போனார்.. பிறகு போலீசுக்கு சென்று புகார் தந்தார்.. போலீசாரும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போதுதான் குழந்தையை ரமாதேவி மற்றும் மஞ்சுளா ஆகியோரின் உதவியுடன், புனேவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான விஷால் என்பவருக்கு ரூ.2.4 லட்சத்திற்கு லட்சுமி விற்றது தெரியவந்தது.. இதையடுத்து லட்சுமி, மஞ்சுளா, ரமாதேவி, விஷால் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனை செய்யப்பட்ட குழந்தையையும் பாதுகாப்பாக மீட்டனர்.
அரசின் கண்காணிப்பு
இந்த சம்பவம் குறித்து பேசிய போலீசார், "மது குடிக்கும் பழக்கம் ஒருவரை எந்த அளவிற்கு மனிதாபிமானமற்ற நிலைக்கு தள்ளுகிறது என்பதற்கான உதாரணம்தான் இந்த சம்பவம்..
மதுவுக்காக சொந்த குழந்தையையே விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டிருப்பது அதிரர்ச்சி, வேதனையை தருகிறது.. குழந்தையை பாதுகாப்பாக அரசின் கண்காணிப்பில் ஒப்படைத்துள்ளோம்.. கைதான 4 பேரிடமும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications