Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லால்பகதூர் சாஸ்திரி டூ மமதா வரை! ரயில் விபத்தால் பறிபோன அமைச்சர் பதவி.. அஸ்வினி வைஷ்ணவ் தப்புவாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 280 பேர் இறந்துள்ள நிலையில் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் இந்தியாவில் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்டவர்கள் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அஸ்வினி வைஷ்ணவின் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி நேற்று கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் நேற்று இரவு தடம்புரண்டது. அதன்பிறகு அந்த வழியாக வந்த பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயில் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதையடுத்து சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

 Lal Bahadur Shastri to Mamata Banerjee, List of railway ministers of India who resigned following train accidents

இப்படியாக அடுத்தடுத்து 3 ரயில்கள் விபத்தில் சிக்கின. இந்தியாவில் ரயில்கள் அவ்வப்போது தடம் புரளும் நிலையில் 3 ரயில்கள் அடுத்தடுத்து இப்படி விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உள்பட 280 பேர் வரை பலியாகி உள்ளனர்.

மேலும் தமிழ்நாட்டை சேர்ந்தோர் உள்பட 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தை சேர்ந்தவர்களை சென்னை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில் மற்றும் விமானத்தில் அவர்களை அழைத்து வந்து சென்னையில் வைத்து சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கிடையே தான் இந்த விபத்து என்பது சுதந்திர இந்தியாவில் நடந்த மோசமான ரயில் விபத்தாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது வரை ரயில் விபத்துக்கான சரியான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா? என்ற கேள்விக்கு நடுவே தான் இதற்கு முன்பு ரயில் விபத்தால் மத்திய ரயில்வே அமைச்சர் பதவியை இழந்தவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

 Lal Bahadur Shastri to Mamata Banerjee, List of railway ministers of India who resigned following train accidents

லால் பகதூர் சாஸ்திரி: இந்த பட்டியலில் முதலிடத்தில் லால் பகதூர் சாஸ்திரி உள்ளார். கடந்த 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாட்டில் அரியலூரில் நடந்த ரயில் விபத்தில் 142 பேர் இறந்தனர். இதையடுத்து லால் பகதூர் சாஸ்திரி அந்த விபத்துக்கு பொறுப்பேற்று தனது மத்திய ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அப்போதைய பிரதமர் நேருவிடம் வழங்கினார். அவரது இந்த செயலுக்கு பாராட்டு கிடைத்தது. அதன்பிறகு பிற துறைகளில் மத்திய அமைச்சராக செயல்பட்ட லால் பகதூர் சாஸ்திரி 1966ல் இந்தியாவின் பிரதமர் பதவியையும் அடைந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டார்.

நிதிஷ் குமார்: இதில் 2வது இடத்தில் இருப்பவர் நிதிஷ் குமார். இவர் தற்போது பீகார் முதல்வராக உள்ளார். லால் பகதூர் சாஸ்திரி மத்திய ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு 43 ஆண்டுகளுக்கு பின் நிதிஷ் குமாரும் ரயில் விபத்தால் மத்திய அமைச்சர் பதவியை இழந்தார். இவர் 1999 ல் மத்திய அமைச்சராக இருந்தார். அப்போது அசாமில் நடந்த காய்சால் ரயில் விபத்தில் 290 பேர் இறந்தனர். இதையடுத்து அவரது மத்திய ரயில்வே அமைச்சர் பதவி பறிபோனது.

மம்தா பானர்ஜி: ரயில் விபத்தால் மத்திய ரயில்வே அமைச்சர் பதவியை இழந்த 3வது நபர் என்ற பெயரை மம்தா பானர்ஜி பெற்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான இவர் தற்போது மேற்கு வங்க மாநில முதல்வராக உள்ளார். 2000ம் ஆண்டில் நடந்த 2 ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமராக இருந்த வாஜ்பாயிடம் வழங்கினார். ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

 Lal Bahadur Shastri to Mamata Banerjee, List of railway ministers of India who resigned following train accidents

சுரேஷ் பிரபு: இந்த பட்டியலில் 4 வது இடம் பிடித்தவர் சுரேஷ் பிரபு. பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். 2017ல் கைபியத் எக்ஸ்பிரஸ் மற்றும் கலிங்கா-உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 4 நாட்களில் தடம் புரண்டு விபத்தை சந்தித்தன. இதில் கைபியத் ரயில் விபத்தில் 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். கலிங்கா-உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 22 பேர் இறந்த நிலையில் 156க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து விபத்துக்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா முடிவை கைவிட்டு காத்திருக்கும்படி பிரதமர் மோடி கூறினாலும் கூட சுரேஷ் பிரபு கட்டாயமாக மத்திய ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகினார்.

இந்நிலையில் தான் தற்போதைய ஒடிசா ரயில் விபத்தை சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுபற்றி அஸ்வினி வைஷ்ணவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‛‛தற்போது மீட்பு மற்றும் நிவாரண பணியில் தான் கவனம் செலுத்துகிறோம்'' என்றே கூறினார். மேலும் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் வேளையில் ரயில் மோதலை தடுக்கும் Anti Collision Devices சாதனங்களை அதிகப்படுத்தும் பணி நடந்து வரும் நிலையில் தான் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+