Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நில எடுப்பு.. நில உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி.. இனி நிம்மதி.. மத்திய அரசின் அடுத்த அதிரடியை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புது அதிரடியை கையிலெடுத்து உள்ளது.. அதன்படி, நில உரிமையாளர்கள் பலன் பெறும் வகையில், இந்த வசதியை செய்து தந்துள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக, எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நிலஅளவை செய்ய https://tamilnilam.tn.gov.in/citizen என்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவங்கி வைத்திருந்தார்.

Land Acquisition and Acquisition Activities and Big News about Bhoomi Rashi Portal Update

இந்த புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய விண்ணப்பிக்கும் பொருட்டு வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.. பொதுமக்கள் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், ஆன்லைனிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உரிமையாளர்கள்: அதேபோல, மத்திய அரசும் பல்வேறு வசதிகளை நில உரிமையாளர்களுக்கு செய்து தந்து வருகிறது. அதாவது, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தை பொறுத்தவரை, 1.32 லட்சம் கிமீ தேசிய நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகள் கட்டமைக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உதவுவதற்காகவே, "பூமி ராசி" (bhoomi rashi portal) என்ற இணையதளத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியிருக்கிறது.. இந்த இணையதளம், கடந்த 2018லேயே உருவாக்கப்பட்டது. இதன் மூலம் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் வெளிப்படைத்தன்மையுடன் கையாளப்பட்டு வருகின்றன..

இணையதளம்: இதன் வாயிலாக, 3,132 திட்டங்களுக்கு இழப்பீடாக 9,381 கோடி ரூபாய் நில உரிமையாளர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது இதே வெப்சைட்டில் மேலும் சில வசதிகள் இணைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், நிலம் கையகப்படுத்துதல் குறித்த சட்டப்பூர்வ நடைமுறைகள், நில உரிமையாளர்களுக்கு விரைவாக இழப்பீட்டு தொகை வழங்குவது, நில உரிமையாளர்களே தங்களுக்கு சேர வேண்டிய இழப்பீடு பட்டுவாடா நிலையை அறிந்து கொள்வது என இப்படி பல்வேறு வசதிகள் அதில் செய்யப்பட்டிருக்கின்றன..

புத்தம் புது பொலிவு: அதேபோல, நிலம் எடுப்பு தொடர்பான மத்திய அரசாணைகள், மத்திய அரசிதழ் பதிவுகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன.. புகார்களையும் பதிவு செய்யலாம்.. அத்துடன், அந்த புகார்களின் நிலைமை என்ன என்பது குறித்தும் நில உரிமையாளர்கள் அறிந்து கொள்ள முடியும்.. இத்தனை அம்சங்களுடன் தயாராகியிருக்கும் "பூமி ராசி" இணையதளமானது, பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+