நில ஆவணம்.. அதைவிடுங்க, நிலத்தரகர்கள் சரவெடி.. 3ம் தேதி விஷயம் இருக்கு.. கோட்டைக்கு பறந்த கோரிக்கை
சென்னை: கூலி தொழிலாளர்கள் தொழிலை, அமைப்புசாரா பட்டியலில் இணைத்திட இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கூலி நிலத்தரகர்கள் தொழிலுக்கு அங்கீகாரம் கேட்டு பல காலமாகவே கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.. அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை சொந்தமாக நிலம் வாங்குவதற்கும், விற்பதற்கும் பாலமாக இருந்து செயல்படுபவர்கள் நிலத்தரகர்கள்.

அரசு அங்கீகாரம்: கூலி நிலத்தரகர் தொழிலாளர்கள் அவர்களுக்கு கமிஷன் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலாளர்களால் அரசுக்கும் வருமானம் வருகிறது. வேறு தொழிலாளர்கள் அமைப்பிற்கு அரசு அங்கீகாரம் கொடுத்து உள்ளது. அதுபோல் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அங்கீகாரம் கொடுத்து அமைப்பு சாரா பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று, தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் சங்கத்தின் 20-ம் ஆண்டு விழா திருப்பூரில் நாளை மறுநாள் நடக்கிறது. இதையொட்டி சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.என்.கண்ணன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அறிக்கை: அந்த அறிக்கையில் சொல்லி உள்ளதாவது: நிலத்தரகர் தொழில் செய்யும் தொழிலாளர்கள் நலன் காக்க அவர்கள் பெற வேண்டிய நிலத்தரகர் கமிஷன் தொகையை சுமூகமாக பெற்றிட கடந்த 24.10.2004 அன்று தமிழ் திருநாடு நிலம், வீடு மனை தரகர்கள் நலச்சங்கம் என்ற பெயரில் சென்னை விருகம்பாக்கத்தில் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் பாலமாக இருந்து நிலத்தரகு தொழிலாளர்கள் செயல்படுகிறார்கள்.
எல்லா தொழிலுக்கும் வேலை முடித்தால் உடனே ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனல் நிலத்தரகு தொழில் செய்யும் கூலி நிலத்தரகர்களுக்கு எப்பொழுது ஊதியம் வரும் என்ற நிலையான கால அவகாசமே இல்லை.
ஆண்டு விழா: ஆண்டுதோறும் சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் மாநாடு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. எங்களது ஒரே நோக்கம் கூலி தொழிலாளர்கள் தொழிலை அமைப்புசாரா பட்டியலில் இணைத்திட வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.
வருகிற 3-12-2023 அன்று திருப்பூரில் நமது சங்கத்தின் சார்பாக 20-ம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் பெருமக்கள் பல அரசியல் தலைவர்கள் பல சங்கத்தின் தோழர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொள்கிறார்கள். ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் தொழிலாளர்கள் கூலி நிலத்தரகர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications