வில்லங்க சான்றிதழை பார்க்க போன ஆபீசர்.. சென்னை ஆவடியையே கலங்கடித்த நில ஆவணங்களும், பவர் பத்திரமும்
சென்னை: சென்னை ஆவடியில் ஒரே நாளில் நடந்த இருவேறு வகையான மோசடிகள் பொதுமக்களை அதிர வைத்து வருகின்றன.. இது தொடர்பான விசாரணையும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
ஆவடி அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார்.. 57 வயதாகிறது.. இவர், கடந்த 2009ல், பூந்தமல்லி அடுத்த திருமழிசை அருகே, 800 சதுர அடி நிலத்தை, பூந்தமல்லி, குண்டுமேடு பகுதியைச் சேர்ந்த கீதா என்பவரிடம் வாங்கியிருக்கிறார்.

ஆனால், 3 மாதங்களுக்குமுன்பு, ஆனந்தகுமாரின் நிலத்தில் மிருதுளா என்பவர் வீடு கட்டி வந்துள்ளார்.. இந்த விஷயம் தெரிந்ததுமே அதிர்ச்சியடைந்த ஆனந்தகுமார், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
நில மோசடி: போலீசாரும் இதுகுறித்த விசாரணையை கையில் எடுத்தனர்.. அப்போதுதான், ஆனந்தகுமாருக்கு 2009ல் நிலத்தை விற்ற கீதா, அதே நிலத்தை போலி ஆவணங்கள் வாயிலாக, கொளஞ்சியப்பன் என்பவருக்கும் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.. கொளஞ்சியப்பன் மோகனா என்பவருக்கும், மோகனா அந்த நிலத்தை மிருதுளா என்பவருக்கும் விற்பனை செய்தது தெரியவந்தது.
போலி ஆவணங்கள் தயாரித்து, 2 தரப்பிற்கும் தந்து, அதிலிருந்து லட்சக்கணக்கில் மோசடி செய்திருக்கிறார் கீதா.. இந்த விஷயம் போலீசாருக்கு தெரியவந்ததுமே, கீதா தலைமறைவாகிவிட்டார்.. இதையடுத்து, நிலமோசடியில் ஈடுபட்ட கீதாவை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று காலை தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.. இப்போது கீதா ஜெயிலில் உள்ளார்.
அதிரடி கைது: இதே ஆவடியில் மற்றொரு மோசடியும் நடந்துள்ளது.. கவரப்பாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்.. இவருக்கு 65 வயதாகிறது.. ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆவார்..

கடந்த 2000ம் ஆண்டு, போர் ஊர்தி ஆராய்ச்சி மறறும் வளர்ச்சி நிறுவன பணியாளர்களின் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் மூலமாக, ஆவடி அருகே தண்டுரை என்ற கிராமத்தில் 2340 சதுர அடி நிலத்தை வாங்கி அனுபவத்தில் வைத்திருந்தார் பாலசுப்பிரமணியம்.
பத்திரப்பதிவு: இந்நிலையில், மேற்கண்ட இடத்தில் வீடு கட்டலாம் என்று முடிவு செய்து, வில்லங்க சான்றிதழ் பார்த்திருக்கிறார்.. அப்போதுதான், 2023-ல் பரசுராமன் என்பவருக்கு, பாலசுப்பிரமணியம் பொது அதிகாரம் கொடுத்ததுபோல, ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்திருந்ததை கண்டு அதிர்ந்தார் பாலசுப்பிரமணியம்..
அதுமட்டுமல்ல, இந்த பொது அதிகார பத்திரத்தில் சரவணன், பால்ராஜ் ஆகியோர் சாட்சி கையெழுத்தும் போட்டிருக்கிறார்கள்.. இந்த பத்திரத்தை பரசுராமன் என்பவர், தன்னுடைய மனைவி சகுந்தலா என்பவருக்கு கிரையமும் செய்திருக்கிறார். இவ்வளவும் போலி ஆவணங்களை தயாரித்தே செய்திருக்கிறார்கள்..
பரபரப்பு: போலி ஆவணங்களை வைத்து, தன்னுடைய ரூ.51 லட்சம் நிலத்தை பரசுராமன் உள்ளிடோர் அபகரித்திருப்பதை கண்டு பாலசுப்பிரமணியம் அதிர்ச்சி அடைந்தார்.. இதையடுத்து, உடனடியாக ஆணையர் சங்கரிடம் புகார் மனுவை தந்தார்.. அந்த மனுவை, ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனரும் உத்தரவிட்டிருக்கிறார். ஒரே நாளில், ஒரே இடத்தில் நடந்த இந்த மோசடி சம்பவம் சென்னையை அதிர வைத்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications