உண்டிலில்ல ஏன் கை வைக்கறீங்க? நில அபகரிப்பு.. நெற்றியில் விபூதி? திமுகவை நறுக்னு கேட்ட இந்து முன்னணி
சென்னை: கோவில் நிலத்தில் பஸ் ஸ்டாண்ட், கோர்ட், கலெக்டர் அலுவலகம் கட்டுகின்றனரே, அதை ஏன் ஸ்டாலின் தடுக்கவில்லை? இந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசுவது சந்தர்ப்பவாத பகல் வேஷ அரசியல் என்பதையாவது புரிந்து கொள்வாரா ஸ்டாலின்? என்று இந்து முன்னணி பல்வறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக, திமுக அரசு விரோதமாக செயல்பட்டு வருவதாக இந்து முன்னணி தொடர்ந்து குற்றஞ்சாட்டுகளை தெரிவித்து வருகிறது.. மேலும், தமிழக கோயில்களில் நடக்கும் உண்டியல் திருட்டுக்கள் குறித்தும் விடாமல் கேள்வி எழுப்பி வருகிறது.

கோயில் சொத்து: அதேபோல, கோயில் சொத்துக்களை பாதுகாக்க தவறும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோயில் சொத்துக்களை பாதுகாக்க கடுமையான சட்ட நடைமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறது...
இதுகுறித்து, இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ஒருமுறை சொல்லும்போது, "கோவில் சொத்துகளுக்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை. இந்து கோவில்களின் சொத்துகளை அரசு திட்டமிட்டு சூறையாடுகிறது. இந்துக்களுக்கு மட்டும் விரோதமாக இந்த அரசு நடக்கிறது. இந்து கோவில்களை மட்டும் இடிக்கிறார்கள்.. கோவில் சொத்துகளை காப்பாற்ற வேண்டும்.. வரும் தேர்தலில் இதற்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்" என்று ஆவேசமாக கூறியிருந்தார்.
இந்து முன்னணி: இந்நிலையில், பக்தி பகல் வேஷம் யார் போடுவது? என்று தமிழக முதல்வருக்கு இந்து முன்னணி மாநில தலைவர் மீண்டும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.. இதுகுறித்து, காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் உள்ளதாவது:
"தமிழகத்தில் பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர் என்று, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். கோவில் உண்டியல் பணத்தை எடுத்துத்தான், இலவச திருமணம் நடத்தி வைத்துள்ளனர். ஆனால், விளம்பரம் மட்டும் முதல்வர் ஸ்டாலினுக்கு. இது என்ன வேஷம்?
திருநீறு: கோவிலில் நடக்கும் எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சிகளிலும், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று கொள்வதில்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்தே காணொலி காட்சி வாயிலாக மட்டுமே கலந்து கொள்வது எந்த விதமான பக்தி என்பதை ஸ்டாலின் தான் சொல்ல வேண்டும். கோவிலுக்கு சென்று திருநீறு கொடுத்தால், அதை நெற்றியில் பூசாதது; பூசினாலும் அது வெளியில் தெரியாமல் இருக்க அழிப்பது பகல் வேஷ அரசியலா, அல்லது பசப்பு அரசியலா?
முருகனின் கந்தசஷ்டி கவசத்தையும், வேல் வழிபாட்டையும் இழிவுபடுத்தி பேசியவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. ஆனால், பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவது யாரை ஏமாற்ற? தமிழகத்தில், 2,000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளதாக ஸ்டாலின் தனக்குத் தானே புகழாரம் சூட்டிக் கொள்கிறார். அதற்காக, செய்த செலவு எவ்வளவு என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிடத் தயாரா?
சனாதன தர்மம்: கோவில் நிலத்தில் பஸ் ஸ்டாண்ட், கோர்ட், கலெக்டர் அலுவலகம் கட்டுகின்றனரே, அதை ஏன் ஸ்டாலின் தடுக்கவில்லை? ஹிந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசுவது சந்தர்ப்பவாத பகல் வேஷ அரசியல் என்பதையாவது புரிந்து கொள்வாரா ஸ்டாலின்?" என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் காடேஸ்வரா சுப்ரமணியம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications