Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்திரப்பதிவில் அதிரடி.. திடீர்னு முளைத்த மேட்டர்.. ஹைகோர்ட் வேற சொல்லிருச்சே.. தமிழக அரசின் முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழிகாட்டி மதிப்பு உயர்வு தொடர்பான சுற்றறிக்கையை, கடந்த வாரம் சென்னை ஹைகோர்ட் ரத்து செய்துவிட்ட நிலையில், முக்கிய பிரச்சனை ஒன்று கிளம்பி உள்ளதாம்.. என்ன அது?

கடந்த பட்ஜெட்டில் அறிவித்தபடி, தமிழகத்தில் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்ய பத்திரப்பதிவுத்துறை தலைவர் தலைமையில் மதிப்பீட்டுக்குழு கடந்தமார்ச் 30ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.

Land guide value of property and What decision will the Tamil Nadu Registration dept regarding the Guide Value of Property

சுற்றறிக்கை: இதையடுத்து, சொத்துகளுக்கான புதிய வழிகாட்டி மதிப்பீடு கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி அமலுக்கும் வந்தது. ஆனால், இந்த சுற்றறிக்கையை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில், கிரெடாய் என்று சொல்லக்கூடிய இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு உள்பட பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்தன.

அவர்கள் தங்கள் மனுவில், "சட்டவிதிகளின்படி எந்தவொரு கலந்தாலோசனையும் நடத்தாமல், பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்காமல் தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக வழிகாட்டி மதிப்பை பல மடங்கு அதிகரித்து இருப்பது சட்டவிரோதமானது. 50 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தியிருப்பது என்பது தற்காலிகமான ஏற்பாடாக தெரியவில்லை. அதனால், இதுதொடர்பான சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

தீர்ப்பு: இந்த வழக்குகளை கடந்த வாரம் விசாரித்த ஹைகோர்ட் நீதிபதி பி.வேல்முருகன் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.. "சட்ட விதிகளின்படி துணைக்குழுக்களை அமைத்து, அறிக்கைகள் பெற்று, அவற்றை ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அதன்பிறகே வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயிக்க இயலும்.

உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, இயற்கை நீதியை மீறும் செயல் என்பதால் அந்த சுற்றறிக்கையை ரத்து செய்கிறேன். விதிகளை பின்பற்றி புதிதாக வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க வேண்டும். அதுவரை கடந்த 2017-ம் ஆண்டு வரை அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டை பின்பற்ற வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

4 சதவீதம்: இதையடுத்து, சொத்து வழிகாட்டி மதிப்பு எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எகிறியது.. பதிவு கட்டணம் 4 சதவீதமாகவும், அதேநேரம் வழிகாட்டு மதிப்பு 2023 மார்ச் வரை இருந்த நிலவரமே தொடரும் என்றே தெரிகிறது.

மேலும், 2017 ஜூன் 8 ம் தேதி வரைகடைபிடிக்கப்பட்டு வந்த சந்தைவழிகாட்டி மதிப்பு இனி இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. எனினும், ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் அல்லது அரசுமாற்றினாலோ நிலவரங்கள் மாற வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டது.

பதிவுத்துறை அதிகாரிகள்: இப்போது விஷயம் என்னவென்றால், வழிகாட்டி மதிப்பு உயர்வு தொடர்பான சுற்றறிக்கையை கோர்ட் ரத்து செய்துவிட்ட நிலையில், எதன் அடிப்படையில் பத்திரப்பதிவு மேற்கொள்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம்.. எப்படியும், 2022 ஏப்ரலுக்கு முந்தைய மதிப்புகள் மறுபடியும் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது என்றாலும், பதிவுத்துறை அதிகாரிகள் மவுனமாக இருப்பதாகவும், இதனால், பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பதிவுத் துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "ஹைகோர்ட் தீர்ப்பு அடிப்படையில் சார் பதிவாளர்களுக்கு என்ன அறிவுறுத்தல்களை வழங்குவது என்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறோம். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும் ஆலோசனை நடந்து வருகிறது" என்றார்..

பெரும் குழப்பம்: சுற்றறிக்கை ரத்தானபிறகு, பத்திரங்களை பதிவு செய்ய சார் பதிவாளர்கள் தயங்குகின்றனர். பொது மக்களும் எந்த மதிப்பு அடிப்படையில் கிரைய பத்திரங்களை தயார் செய்வது என்பது தெரியாமல் தவிப்பதால், மக்கள் குழப்பத்தை பதிவுத் துறை தீர்க்க வேண்டும் என்று, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி ராமபிரபு கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+