நில வழிகாட்டி மதிப்பு..சொத்து வரி ரசீது + மின்கட்டண ரசீது.. தமிழக அரசின் பதிவுத்துறை முக்கிய உத்தரவு
சென்னை: நில வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் தொடர்பாக, தமிழக அரசின் பதிவுத் துறை புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.. என்ன அது?
வழிகாட்டி மதிப்பு என்பது நிலவிவகாரங்களில் மோசடிகளை தடுக்கவும், அந்த மோசடிகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.. அதேபோல, பதிவுக் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க முயல்பவர்களையும் கண்டுபிடிக்க உதவுகிறது.. இதனால், நிலம் தொடர்பான பரிவர்த்தனைகளில் நடக்கும் ஊழல் மற்றும் மோசடிகளை எளிதாக தடுக்க முடியும்..

அமைச்சர் மூர்த்தி: இந்த வழிகாட்டி மதிப்பு மற்றும் அடுக்குமாடி திட்டங்களில் வீடு விற்பனை பதிவுக்கான நடைமுறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்த போவதாக தமிழக அமைச்சர் மூர்த்தி சமீபத்தில் கூறியிருந்தார். அதாவது, சென்னை, கோவை நகரங்களில், 10 சதவீதம் வரையும், பிற நகரங்களில், 3, 5, 7 சதவீதங்களில் வழிகாட்டி மதிப்பை உயர்த்த ஆராய்ந்து வருவதாக கூறியிருந்தார்.
இதற்கு பிறகு, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், அனைத்து தெரு மற்றும் சர்வே எண்களுக்கும், வழிகாட்டி மதிப்பு மாற்றி அமைக்கப்படவில்லை, குறைந்தபட்ச மதிப்பை விட குறைவாக உள்ள தெரு மற்றும் சர்வே எண்களுக்கு மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகள், tnreginet.gov.in என்ற பதிவுத் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்று தெளிவுபடுத்தியிருந்தார்.
பத்திரங்கள்: பொதுவாக, நிலங்களுக்கு சர்வே எண் வாரியாக, வழிகாட்டி மதிப்பு என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புகள் அடிப்படையில்தான் பத்திரங்கள் பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
ஆனால் தற்போது, குடியிருப்பு, விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகளே இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றின் ஓனர்களும், குடியிருப்புக்கான மதிப்பிலேயே சொத்துக்களை விற்பதால், அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவேதான், மண்டல அலுவலகங்களுக்கு, பதிவுத்துறை தற்போது முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. அதில் உள்ளதாவது:
"பெரும்பாலான இடங்களில் நகர சாலைகள், தெருக்களில் வணிக ரீதியிலான செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. ஆனால், வழிகாட்டி மதிப்புக்கான பட்டியலில், இந்த பகுதிகள் குடியிருப்பாகவே தொடர்கின்றன. அதனால், ஒவ்வொரு மண்டலத்திலும், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவரும், 10 ஆவணங்களில், சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் சொத்து வரி ரசீது, மின் கட்டண ரசீதுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
இதில், வணிக பயன்பாடு என குறிப்பிடப்பட்டிருந்தால், வழிகாட்டி மதிப்பு வகைபாட்டை மாற்ற, பரிந்துரை செய்ய வேண்டும். மண்டலம் வாரியாக, இது தொடர்பான விபரங்களை பட்டியலாக தயாரித்து, 5 நாட்களுக்குள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.. சொத்து வரி, மின் கட்டண ரசீது அடிப்படையில் ஆய்வு செய்து, வழிகாட்டி மதிப்புகளை மாற்றுவதற்கான பணிகளை, பதிவுத்துறை கையில் எடுத்துள்ளது, மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications