பட்டாவுக்காக படாத பாடு.. நிலம் வைத்துள்ளோருக்காக வசதி இருக்கட்டும்.. பட்டா மாறுதல் இ சேவை முடக்கம்?
சென்னை: தமிழகத்தில் வீடு, மனை சொத்து வாங்குவோர், அதற்கான பட்டாவில், பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, இ சேவை மையங்கள் வாயிலாக பொது மக்கள் பதிவு செய்து வரும்நிலையில், அடிக்கடி புகார்கள் கிளம்பிய வண்ணம் உள்ளன.. சமீபத்தில்கூட தொழில்நுட்ப கோளாறு நிலவிய நிலையில், பொதுமக்களே அதுகுறித்து புகார் கூறி, கோளாறை சரி செய்ய வைத்தனர். இப்போது பட்டா மாறுதல் சேவையில் திடீர் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அதற்கான பத்திரப்பதிவு முடிந்ததும், பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக பொதுமக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதை தடுக்க, வருவாய் துறை பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

குறிப்பாக, உட்பிரிவு சர்வே எண் உருவாக்க வேண்டிய தேவை இல்லாத சொத்துக்களுக்கு,. பத்திரப்பதிவு அடிப்படையில், ஆட்டோமெடிக்காகவே பட்டா பெயர் மாற்றம் செய்து தரப்படுகிறது. பிறகு உட்பிரிவு உருவாக்க வேண்டிய இனங்களுக்கும், பணிகளை விரைந்து முடிப்பதற்காக சர்வேயர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
நிலம், சொத்துக்கள்
இதன்மூலம் விண்ணப்பதாரர்கள், பட்டா மாறுதலுக்காக இ சேவை மையங்கள் வாயிலாக பதிவு செய்யலாம்.. இதற்கு கட்டணம் செலுத்திய ரசீது உள்ளிட்ட நகல்களுடன் விஏஓ அலுவலகத்தை அணுகலாம்..
தமிழகத்தில் வீடு, மனை சொத்து வாங்குவோர், அதற்கான பட்டாவில், பெயர் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்களை, இந்த இ - சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யலாம்.. இப்படி பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அல்லது சர்வேயருக்கு அனுப்பப்படும்.
பட்டா மாறுதலுக்கு ஆவணங்கள்
இசேவை மையத்தில் பட்டா மாறுதலுக்கு, செட்டில்மென்ட் பத்திரம், கிரையப் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், தானப் பத்திரம், பரிவர்த்தனை பத்திரம் அக்குவிடுதலைப் பத்திரம் உள்ளிட்ட 6 பத்திரங்களில் உங்களுக்கான பத்திரம், வில்லங்க சான்றிதழ், ஏற்கனவே பட்டா யார் பெயரில் இருந்ததோ அந்த பத்திரம், ஆதார் கார்டு, முகவரி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், போன்றவைகளுடன் விண்ணப்பிக்கலாம்..
இந்த இ-பட்டாவுடன், ஆதார் நம்பரையும் போட்டோவையும் இணைத்து, ஆன்லைனில் வழங்கும் நடைமுறை, விரைவில் அமலுக்கு வரப்போவதாகவும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
இந்த புதிய வசதி மூலம் ஆள் மாறாட்டம், பட்டா மோசடிகள் நடக்க வாய்ப்பில்லை என்றும், இ-பட்டாக்களுடன், ஆதார் நம்பரையும் போட்டோவையும் இணைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், இ சேவை மையங்களில் சில சிக்கல்கள் அவ்வப்போது எழுந்துவிடுகின்றன.. 2 மாதங்களுக்கு முன்புகூட ஒரு புகார் கிளம்பியது..
பட்டா மாறுதல் வெப்சைட்
அதாவது ஒவ்வொரு இசேவை மையத்திலும், தினந்தோறும் 20 விண்ணப்பங்கள் வரை பதிவு செய்யப்படுகின்றன. என்றாலும்சில இ சேவை மையங்களில், விண்ணப்ப பதிவு பணிகள் பாதிக்கப்பட்டு விடுகின்றன.
இது குறித்து, இசேவை மைய தரப்பில் கூறும்போது, "வருவாய் துறையின் அனைத்து சேவைகளும், இ டிஸ்ட்ரிக்ட் என்ற வெப்சைட் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பட்டா மாறுதல் விண்ணப்பம் மட்டுமே "இ டிஸ்ட்ரிக்ட்" வெப்சைட் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. பட்டா மாறுதல் தவிர்த்த மற்ற அனைத்து விண்ணப்ப பதிவு பணிகளும், இ சேவை வெப்சைட்டிற்கு மாற்றப்பட்டு நடந்து வருகின்றன..
அடிக்கடி சர்வர் கோளாறு
இதில், இ சேவை வெப்சைட் வழக்கம்போல செயல்படும் நிலையில், இடிஸ்ட்ரிக்ட்வெப்சைட்டில் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பதிவு பணிகள் ஆரம்ப நிலையிலேயே தடைபடுவதால்தான், பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பதிவிடும் பணிகளும் பாதிக்கின்றன" என்று சமீபத்தில் சலசலப்புகள் கிளம்பின.
இதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள், "இ டிஸ்ட்ரிக்ட் வெப்சைட்டில் சர்வர் பிரச்சனை இருப்பதால், அவை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் அப்பணிகள் சீரானதும் பட்டா மாறுதல் தடையின்றி நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
மீண்டும் முடங்கிய இசேவை வசதி?
இந்நிலையில், இ - சேவை மையங்கள் வாயிலாக, பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் வசதி, முடங்கி உள்ளதாக மீண்டும் புகார்கள் கிளம்பியிருக்கின்றன. கடந்த மாதம் தொடர்ந்து சில நாட்கள், இ -சேவை இணையதளத்தில், பட்டா மாறுதல் விண்ணப்ப பதிவு முடங்கியிருந்தது.. இதுகுறித்து பொதுமக்கள் புகார் கூறியிருந்த நிலையில், உடனடியாக அந்த தொழில்நுட்ப குறைபாடு சரி செய்யப்பட்டது.
ஆனால், மறுபடியும் இதில் பிரச்சனை ஏற்பட்டு முடங்கியிருக்கிறதாம்.. உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில், பட்டா மாறுதல் தொடர்பான மனுக்கள் அதிகம் வருவதால், அவை அனைத்துமே ஆன்லைனில்தான் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
இதற்காக, இசேவை மையங்களில் பதிவேற்ற வசதி நிறுத்தப்பட்டுள்ளதா? என்ற சந்தேகமும் வலுத்து வருவதால், இதுகுறித்து அதிகாரிகள் விளக்கம் தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications