நிலம் வாங்குவோர் அவசியம் தெரிஞ்சுக்குங்க.. ஆன்லைனில் ஆதார், பட்டா இணைப்பது எப்படி தெரியுமா? சுலபம்
சென்னை: பாடுபட்டு உழைத்த பணத்தை கொண்டு, நிலத்தை வாங்குவோர், சில விஷயங்களிலுள்ள நுணுக்கங்களை கவனிக்க தவறிவிடுவார்கள்.. நிலம் பதிவதற்கு முன்பு, தமிழக பதிவுத்துறையின் வழிகாட்டு மதிப்பு என்ன? என்பதை பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வமான வெப்சைட்டில் தெரிந்து கொள்ள வேண்டும்.. மேலும் சம்பந்தப்பட்ட நிலத்தில் வில்லங்கம் இருந்தால், எதிர்காலத்தில் வரக்கூடிய சிக்கலையும் தவிர்க்கலாம் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.. அந்தவகையில், பெயிரா சில அறிவுறுத்தல்களை தந்துள்ளது. அதனை இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
நிலம் வாங்கும் முன்பு, பதிவுத்துறையின் வழிகாட்டு மதிப்பு என்ன? என்பதை பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிந்து கொள்ள வேண்டும் இதில் ஓரளவு நிலத்தின் மதிப்பு அறிய முடியும்.

பட்டா நிலம்? புறம்போக்கு நிலம்?
எனினும் நேரிலும் சம்பந்தப்பட்ட நிலத்தை பார்க்க வேண்டும். மனையின் விலை நிலவரம் என்ன? பட்டா நிலமா? புறம்போக்கு நிலமா? கோயிலுக்கு சொந்தமான நிலமா? என்று விஏஓவை தொடர்புகொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும் அதற்கு பிறகே நிலத்தை பற்றின முடிவுக்கு வரவேண்டும்.
அடுத்ததாக, யாரின் இடத்தை விலைக்கு வராங்க உள்ளீர்களோ, அவர்களது நில ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். அதாவது, அந்த நிலத்தின் பழைய உரிமையாளர்கள்? இப்போதைய உரிமையாளர்கள், தாய்ப்பத்திரத்தின் விவரங்கள் சரியா? அசல் பத்திரம் அனைத்துக்குமே இருக்கிறதா? சம்பந்தப்பட்ட நிலம் அல்லது வீட்டின் மீது ஏதாவது கடன் உள்ளதா? அடமானத்தில் உள்ளதா? போன்றவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சர்வேயர்கள் உதவி
நில அளவையர்கள் உதவியுடன் அந்த நிலத்தின் நீளம், அகலம் சரியாக இருக்கிறதா? என்பதையும் அளந்து உறுதி செய்து கொள்ளலாம் என்றெல்லாம் அறிவுறுத்துகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், பொதுமக்களின் வசதியையும், நன்மையையும் கருத்தில்கொண்டு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு ( FAIRA) சில பொதுவான தகவல்களை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. அதில் பட்டாவுடன் ஆதார் இணைப்பதன் அவசியம் குறித்து விவரித்துள்ளது,.
அதில், "நம்மால் வாங்கப்பட்ட நிலம் நமக்கே பாதுகாப்பாக இருக்க, அது வருவாய் துறை ஆவணங்களில் சரியாக பதிவாகி இருக்கணும். அதற்காகவே பட்டா (Patta) என்பது முக்கியமான சொத்து ஆவணமாகும். அந்த பட்டாவுடன் நம்முடைய ஆதார் எண்ணை இணைப்பது, அரசு தரவுகள் சரியாக இருக்கும் விதமாகவும், அடையாள முறை முறையாக இருக்கும் விதமாகவும் உதவுகிறது. இது ஒரு கட்டாய நடவடிக்கையாக மாறி வருகிறது. இன்னும் சேர்க்காமல் இருந்தீங்கன்னா, இப்பவே செய்து விடுங்க!
ஆன்லைன் மூலம் ஆதார்-பட்டா இணைப்பது எப்படி?
தமிழ்நாடு அரசின் இணையதளம் மூலம் நீங்கள் சுலபமாக வீட்டிலிருந்தபடியே இது செய்யலாம்.
படி 1:
பதிவுத்துறை அதிகாரப்பூர்வ இணையதளமான
https://eservices.tn.gov.in-க்கு செல்லவும்.
படி 2:
'Aadhaar Linking for Patta' என்ற பகுதியைத் தேர்வு செய்யவும்.
படி 3:
உங்கள் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் பட்டா எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.
படி 4:
உங்கள் ஆதார் எண் மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்யவும்.
படி 5:
உங்கள் மொபைலில் வரும் OTP (ஒவ்வொரு முறையும் வரும் பாதுகாப்பு குறியீடு) மூலம் உறுதிப்படுத்தவும்.
படி 6:
Submit பட்டனைக் கிளிக் செய்தவுடன், உங்கள் ஆதார் எண்ணும் பட்டாவும் இணைக்கப்படும்.
ஆப்லைன் மூலம் விண்ணப்பம்
நீங்கள் நேரில் சென்று செய்ய விரும்பினால்
உங்கள் வட்டாட்சியர் அலுவலகம் (VAO அல்லது RI) சென்று,
ஆதார் நகல் மற்றும் பட்டா நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
ஒரே பட்டாவுக்கு ஆதார்
பட்டா வேறு பெயரில இருக்கு, ஆதார் என்னுடைய பேரில் இருக்கு. இணைக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது பட்டாவில் இருக்கும் பெயரும் ஆதாரங்கள் இருக்கும் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லையெனில் உரிமை மாற்றம் (Name Transfer) செய்து பின்னர் இணைக்கலாம்.
ஒரே பட்டாவிற்கு ஒருவருக்கும் மேல் ஆதார் இணைக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது தற்போது ஒரே உரிமையாளரின் ஆதார் மட்டுமே இணைக்க முடியும்.
நில உரிமை சிக்கல்கள்
இப்போதே அதற்கான வேலையை உடனே செய்யுங்கள் எதிர்காலத்தில் நில உரிமை சிக்கல்கள் வரும். முக்கியமாக, அரசு நிவாரணங்கள், மானியங்கள், வேளாண் உதவிகள் போன்றவை பெற முடியாமல் போகும். e-Survey, e-Adangal போன்ற சேவைகள் மூலம் நீங்கள் நிலம் தொடர்பான தகவல்களை நேரடியாக பெற முடியாது.
எனவே, நிலம் வாங்கியது மட்டும் போதாது. அதன் உரிமையை அரசு தரவுகளில் உறுதிப்படுத்தும் முக்கியமான கட்டமாக ஆதார் இணைப்பு இருக்கிறது.. இது அரசு பரிந்துரைக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் செய்யாதவர்கள், இப்பவே இணையதளம் சென்று செய்துவிடுங்கள்.. சிக்கலில்லாத நில உரிமைக்கு இது அத்தியாவசியம்!" என பெயிரா தெரிவித்துள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications