நிலப்பட்டா.. விவசாய பட்டா வீட்டுமனைகளாக மாறுகிறது.. தேனி அருகே சூப்பர்! மகிழ்ச்சியில் 6800 பயனாளிகள்
தேனி: 86 ஆயிரம் பட்டாக்களை வழங்க போவதாக தமிழக முதல்வர் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்திருந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் போடி, சின்னமனுாரில் 6800 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் பணியை சர்வே பிரிவினர் துவங்கியிருக்கிறார்கள்.
சென்னை, செனாய் நகர் விங்ஸ் கன்வென்ஷென் சென்டரில் நடைபெற்ற அரசு விழாவில் 2,500 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய உரையில் முக்கிய தகவலை வெளியிட்டிருந்தார்.

அதில், தமிழ்நாடு முழுக்க நகர பகுதிகளில் 86 ஆயிரம் பட்டாக்களை 6 மாத காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.. இதை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டும் ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29 ஆயிரத்து 187 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. அதேபோல, மதுரை, நெல்லை போன்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் மட்டும் 57 ஆயிரத்து 84 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட இருக்கிறது.
நில பட்டாக்கள் வழங்கப்படும்
ஏறத்தாழ 63 ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்துகின்ற வகையில், 86 ஆயிரம் பட்டாக்களை வழங்க நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார்கள். இது தமிழ்நாட்டின் வரலாற்றில் நிலைத்து இருக்கப் போகின்ற ஒரு நடவடிக்கை" என்று பெருமிதத்தோடு கூறியிருந்தார். இது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்துவருகிறது.
இதனிடையே, தேனி மாவட்டத்தில் போடி, சின்னமனுாரில் விவசாய நில பட்டாக்களில் வீடு கட்டி வசித்த 6800 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் பணியை சர்வே பிரிவினர் ஆரம்பித்திருக்கிறார்கள்.. இதற்காக பட்டாக்களை கணினி மயமாக்கும் பணிகளும் ஆரம்பமாகியிருக்கிறது.
கணினியில் இல்லாத பட்டா நிலங்கள்
போடி, சின்னமனுாரில் உள்ள பலரும் தங்கள் நிலங்கள் தொடர்புடைய பட்டாக்கள் கணினியில் இல்லாததால் நிலங்கள் வீட்டுமனைகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.. சிலர் அரசு வழங்கிய பட்டாக்களை வைத்திருந்தாலும், அவை ஆன்லைனில் தவறுதலாக காண்பித்ததாக கூறினார்கள்..
அதனால்தான் போடி, சின்னமனுார் பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம், தாலுகா, ஆர்டிஓ, அலுவலகங்களில் பட்டாவை கணினியில் பதிவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.. இது சம்பந்தமான மனுக்களையும் பயனாளிகள் தந்திருந்த நிலையில், அவைகள் ஆய்வு செய்யப்பட்டன.
விவசாய நிலம் பட்டாக்கள்
அப்போது சிலரது மனுவை ஆய்வு செய்த போது பலர் ரய்த்துவாரி எனப்படும் விவசாய நிலத்திற்கான பட்டாக்களை வைத்திருந்தது தெரிந்தது. இதனால் சர்வே துறை சார்பில் அவ்வாறு வீட்டு மனைகளுக்கு விவசாய நிலம் என வழங்கப்பட்ட பட்டாக்கள் எத்தனை என சர்வே பணிகளை துவக்கியது.. அத்துடன், சில அரசு பதிவேடுகளில் அந்த நிலங்களில் வீடுகள், வீட்டு மனைகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.
அந்தவகையில், சின்னமனுாரில் 1878, போடியில் 4985 பட்டாக்கள் வீட்டுமனை பட்டாக்களாக மாற்றும் பணி துவங்கியது. இதற்காக சர்வேயர்கள் மூலம் அளவீடு, ஆவணங்கள் சரிபார்ப்பு செய்யப்பட்டது.
பட்டாக்கள் பதிவேற்றம்
இறுதியில், பட்டா உதவியாளர், சர்வேயர், துணைதாசில்தார், முதுநிலை படம் வரைபவர், துணை ஆய்வாளர், தாசில்தார், ஆர்டிஓ, டிஆர்ஓ, கலெக்டர் என 9 அதிகாரிகள் ஒப்புதலுடன் பட்டா மாற்றம் செய்து கணினியில் பதிவேற்றும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இதுவரை போடியை சேர்ந்த 783 பெயருடைய பட்டாக்கள் வீட்டு மனைபட்டாக்களாக மாற்றம் செய்து கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும, விரைவில் மற்ற பட்டாக்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, இதன் மூலம் இவர்களது இடங்களை விற்பனை செய்வது, வாங்குவதில் இருந்து சிரமம் குறையும் என்றும் சர்வே துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications