Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆப்பு" அப்பார்ட்மென்ட் வீடுகளுக்கு?.. அடுக்குமாடி குடியிருப்புகள் சீரமைப்புக்கு புதிய கொள்கை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் விவகாரத்தில், புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் வீட்டுவசதி வாரியம் அடுத்தக்கட்ட நடவடிக்கையை கையில் எடுக்க போவதாக தெரிகிறது.

பதிவுத்துறை சார்பில், பதிவு நடைமுறைகள் குறித்து, கடந்த வாரம் சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.. பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பதிவுத்துறை செயலர் ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Land Registration and Is there a change in the issue of old Apartments by Tamil Nadu Government

அப்போது அமைச்சர் மூர்த்தி பேசும்போது, பெங்களூரு போன்ற இடங்களுக்கெல்லாம் போய் பாருங்கள். அங்கே, இப்போதைக்கு சந்தை மதிப்புக்கு ஏற்ப பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. ஆனா இங்கே அப்படியில்லை. வழிகாட்டி மதிப்பை கொண்டு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. சென்னையில் சந்தை மதிப்பை விட வழிகாட்டி மதிப்பு குறைவாக இருக்கிறது. சதுர அடி ரூ.50 ஆயிரம் என்பது ரூ.15 ஆயிரமாக இருக்கிறது. அதனால், நில வழிகாட்டி மதிப்பு குறித்து பேச வேண்டும்.

வீடு விற்பனை: விரைவில் வழிகாட்டி மதிப்பு மற்றும் அடுக்குமாடி திட்டங்களில் வீடு விற்பனை பதிவுக்கான நடைமுறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம். நிலம், வீடு ஆகியவற்றின் மொத்த மதிப்பு அடிப்படையில், அடுக்குமாடி வீடுகளின் பத்திரங்களை பதிவு செய்ய, புதிய நடைமுறையை உருவாக்கி வருகிறோம்.

கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், நிலத்தின் சந்தை மதிப்புக்கும், வழிகாட்டி மதிப்புக்கும் இடையிலான வேறுபாடு, 10 சதவீதம் வரை தான் இருக்கிறது. ஆனால், தமிழகத்திலோ, 60 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது..

வருவாயை அதிகரிக்க, மற்ற மாநிலங்களில் உள்ளது போல, வருடந்தோறும், தானாகவே வழிகாட்டி மதிப்புகள் உயரும் நடைமுறையை அமல்படுத்த வேண்டியுள்ளது.. முக்கியமாக, சென்னை, கோவை நகரங்களில், 10 சதவீதம் வரை உயர்த்தலாம். பிற நகரங்களில், 3, 5, 7 சதவீதங்களில் வழிகாட்டி மதிப்பை உயர்த்த ஆராய்ந்து வருகிறோம்.

அப்பார்ட்மென்ட்கள்: அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கர்நாடகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களை போல் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய இருக்கிறோம். கிராமங்களில் வழிகாட்டி மதிப்பு சதுர அடிக்கு ரூ.21 முதல் இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். இனி நிலத்துக்கான குறைந்தபட்ச மதிப்பு சதுர அடிக்கு, 50 ரூபாயாக இருக்கும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். பத்திரப்பதிவு முறைக்கான நடைமுறையை இணையதளத்தில் பதிவு செய்தால் பத்திரப்பதிவில் எந்த பிரச்சினையும் இல்லை" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகள் சீரமைப்புக்கு புதிய கொள்கை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. தமிழகத்தில் வீட்டுவசதி வாரியம், தனியார் கட்டுமான நிறுவனங்கள் வாயிலாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் வீடு வாங்கியோர் தங்களுக்குள் சங்கம் அமைத்து பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்கின்றனர். இந்த குடியிருப்புகள், 40 வருடங்களை கடந்துவிட்ட நிலையில், அவற்றை இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது வழக்கமான ஒன்றுதான்.

கட்டுமானங்கள்: இதில் பெரும்பாலும், வீட்டு உரிமையாளர்கள் தங்களுக்குள் பேசி, ஏதாவது ஒரு கட்டுமான நிறுவனத்தை தேர்வு செய்வதும் வழக்கம். இப்படிப்பட்ட சூழலில், ஒருங்கிணைப்பாளராக செயல்பட வீட்டுவசதி வாரியம் முன்வந்தது.

அத்துடன், பழைய குடியிருப்பு உரிமையாளர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாமல், லாபகரமான முறையில் மறு கட்டுமான பணிகளை மேற்கொள்ள உதவிகள் வழங்கப்படும் என்று சமீபத்தில், வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்திருந்தார்.

சில நாட்களுக்கு முத்துசாமி செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார். அப்போது, "தமிழகத்தில் வீட்டு வசதித்துறை சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுமக்கள், அரசு அலுவலகங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மொத்தம், 138 குடியிருப்புகள் மோசமாக உள்ளன.. அதில், மிக மோசமான நிலையில், 60 குடியிருப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை இடித்து புதிய குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Land Registration and Is there a change in the issue of old Apartments by Tamil Nadu Government

மேலும், பல இடங்களில் சுயநிதி திட்டத்தின் வாயிலாக கட்டப்பட்டு, 50 ஆண்டுகளாகிய கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. அந்த குடியிருப்போர் நலச்சங்கங்கள் சேர்ந்து நடவடிக்கை குழு அமைத்து பேச அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஒப்பந்ததாரர்களை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.. இதற்கு வீட்டு வசதித்துறை தேவையான ஆலோசனைகளை வழங்கும்" என்று கூறியிருந்தார் முத்துசாமி.

புதிய கொள்கை: அதன்படி, புதிய விதிமுறைகள் அமலுக்கு வருமா? போன்ற எதிர்பார்ப்புகள் தற்போது எழுந்து வருகின்றன.. காரணம், வீட்டுவசதி வாரியம் ஒருங்கிணைப்பாளராக செயல்பட விதிமுறைகள் அடங்கிய புதிய கொள்கை உருவாக்கப்பட்டதுடன், இதற்கான வரைவு ஆவணமானது, கடந்த ஜூலையிலும், திருத்தப்பட்ட வரைவு கொள்கை ஆவணம், கடந்த ஜூனிலும் அரசுக்கு அனுப்பப்பட்டது.

இப்போது, இந்த ஆவணங்கள் அனைத்துமே பரிசீலனைக்கு சென்றுள்ளதாம்.. நிதித்துறை ஒப்புதல் கிடைத்தவுடன் இன்னும் சில துறைகளின் கருத்துகள் பெறப்பட்டு, புதிய கொள்கை அறிவிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+