"18" ஆடிப்பெருக்கு.. பின்னாலயே பத்திரப்பதிவு துறை வெளியிட்ட தகவலை பாருங்க.. நோட் பண்ணுங்க மக்களே
சென்னை: நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சார் பதிவாளர் அலுவலகங்களில் வழங்கப்படும் டோக்கன் குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன் மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை. பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்து வரதேவையுமில்லை.
ஆன்லைன் வசதிகள்: ஜஸ்ட் 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள் அனைத்துமே ஆன்லைன் முறைக்கு மாறிவிட்டன.. எனவே, பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அனைத்துமே, முன்னதாகவே அதற்குரிய வெப்சைட்களில் பதிவு செய்ய வேண்டும்..

இதற்கு பிறகு, பத்திரங்களின் அடிப்படை சரிபார்ப்பு முடிந்த பிறகு விண்ணப்பதாரரின் விருப்பம் மற்றும் சார்பதிவாளரின் பணி அடிப்படையில் நேரம் ஒதுக்கப்பட்டு, பத்திரப் பதிவுக்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
சார் பதிவாளர்: ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகத்திலும் தினமும் 100 முதல் 200 டோக்கன்கள் வரையும், சற்று பெரிய அலுவலகங்களில் 300 முதல் 400 டோக்கன்கள் வரையும் வழங்கப்படும்.. டோக்கன் வழங்கப்பட்டவுடனேயே, விண்ணப்பதாரர்களும், தங்கள் ஒரிஜினல் டாக்குமெண்ட்களுடன் வந்தால் பத்திரப்பதிவு சீக்கிரமாக முடிந்துவிடும்.
எனினும், விண்ணப்பதாரர்கள் டோக்கனுக்கான உரிய நேரத்தில் வருவதில்லையாம்.. அதேபோல, சார் பதிவாளருக்கு வேறு கூடுதல் பணிகள் இருந்துவிட்டால், விண்ணப்பதாரருக்கு அதே நாளில் வேறு ஒரு நேரத்தில் டோக்கன் வழங்கப்படுகிறதாம்.. இப்படியெல்லாம் நடைமுறை சிக்கல் உள்ளதால், இதற்கு மாற்று கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
பத்திரப்பதிவு: அதாவது, பத்திரப்பதிவு அலுவலகம் நாளில் வழங்கப்படும் டோக்கனில் உள்ள நேரத்துக்கு விண்ணப்பதாரர்கள் வர வேண்டும் அப்படி வராவிட்டால், அந்த டோக்கனை மறுமுறை பயன்படுத்த முடியாதபடி ரத்து செய்ய வேண்டும்.. இதை நடைமுறைப்படுத்தினால் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களும், காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது...
அதிகாரிகளுக்கும் நீண்ட நேரம் பணிபுரியும் சூழல் குறையும் என்கிறார்கள். இந்த கோரிக்கையானது விரைவில் பரிசீலிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பதிவு சார் அலுவலகங்களில் வழங்கப்படும் இந்த டோக்கன்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆடிப்பெருக்கு: அதன்படி, தமிழ்நாட்டில் அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களில் நாளைய பதிவுக்காக தரப்படும் டோக்கன்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.. காரணம், நாளை ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி அதிகமாக ஆவணங்கள் பதிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இதனாலேயே டோக்கன்களும் அதிகரித்துள்ளதாக பத்திரப் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications