லேண்ட் ரோவர் வருது.. நிலங்களை துல்லியமாக அளக்க 454 ரோவர் கருவிகள்.. ஜிபிஎஸ் வசதியில் அரசு குட்நியூஸ்
சென்னை: பாரம்பரிய நடைமுறைகளுக்கு மாற்றாக, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அதன்மூலம், நிலத்தின் அளவு மற்றும் நிலம் எங்குள்ளது என்பதை எங்கிருந்து வேண்டுமானாலும் அறிந்து கொள்ள, புதிய வசதிகள் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.. இதற்கு பிரத்யேகமாக உதவுவதுதான் ரோவர் கருவிகள்.. இந்த கருவிகள் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நிலங்களை தனித்தனியாகவும், மொத்தமாகவும் அளக்கும் பணிகள், நில அளவைத்துறை வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.

இதில், நிலத்திற்குரிய பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல் தொடர்பான நில அளவை சேவைகளின் தரத்தினை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.. மேலும், நிலத்தின் எல்லைகள், பரப்பளவு போன்றவற்றிலுள்ள பிழைகளை திருத்த வேண்டியதும் கட்டாயமாகிறது. அதனால்தான்,
ஜிபிஎஸ் முறை
நம்முடைய அரசும் அதற்குரிய வசதிகளை செய்து தந்தவாறே உள்ளது. இதற்காக, நிலங்களின் இருப்பிடத்தை, செயற்கைகோள் மூலம் தெரிந்து கொள்ளவே GPSமுறை பயன்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில், குறிப்பிட்ட சில இடங்களில் இருந்தபடியே, அனைத்து நிலங்களின் எல்லைகளையும் தெரிந்து கொள்ள ரோவர் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்காக கடந்த 2023ம் ஆண்டு முதல் இரண்டு கட்டங்களாக, நில அளவை பணிக்கு, ரோவர் கருவிகள் வாங்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பும், பாரம்பரிய நடைமுறைகளுக்கு மாற்றாக, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த, புதிய கருவிகள் வாங்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் தந்து, நில அளவை துறைக்கு புதிதாக ரூ.5 லட்சத்துக்கு 200 ரோவர் கருவிகளை வாங்கியிருந்தது.
ரோவர் கருவிகள்
இந்த ரோவர் கருவிகள் மூலம், ஒரு நிலத்தின் அளவு, சம்பந்தப்பட்ட நிலம் எங்கே அமைந்துள்ளது? என்பதை சுலபமாக அறிந்து கொள்ள முடியும்.. மேலும், அதிக பரப்பளவு நிலங்களை, மிக குறைவான நேரத்திற்குள் அளப்பதற்கும் இந்த ரோவர் கருவிகள் உதவியாக இருக்கும்..
இந்நிலையில், மீண்டும் 454 ரோவர் கருவிகளை நம்முடைய அரசு வாங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது... சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு வழங்குவதற்காக மொத்தம் 454 ரோவர் கருவிகள் வாங்கப்பட உள்ளன... இவற்றை, 27 கோடி ரூபாயில் வாங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சர்வேயர்கள்
இதற்கு நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகள் ஆரம்பமாகி உள்ளதால், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று நில அளவைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதிக பரப்பளவு நிலங்களை மிக குறுகிய நேரத்தில் அளப்பதற்கு இந்த ரோவர் கருவிகள் பேருதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது..
அதுமட்டுமல்ல, பொதுமக்கள் விண்ணப்பித்தவுடன் நில அளவையை உடனுக்குடன் செய்து தருவதற்காக, சர்வேயர்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஜிபிஎஸ் கருவிகள்
சொத்து பத்திரங்களில் குறிப்பிடப்படும் சொத்து, உண்மையிலேயே உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காகவும், இடம் அமைந்துள்ள நகர், தெரு போன்றவற்றை அறிந்து கொள்ளவும், ஜிபிஎஸ் போட்டோவையும் இணைக்க பதிவுத்துறை சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. இதனால் சொத்தின் நிலையை துல்லியமாக அறிய முடியும்.
இந்த போட்டோக்களை வைத்துதான், பத்திரப்பதிவின்போது ஆய்வு செய்து, சொத்தின் தன்மை ஆராயப்படும்.. எனவே, சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தமிழக அரசே ஒரு செயலியை பிரத்யேகமாக உருவாக்க வேண்டும் அல்லது நம்பகமான, பாதுகாப்பான முறையில் எந்த செயலியை பயன்படுத்த வேண்டும்? என்று வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications