சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2500 பேருக்கு அழைப்பு..வந்தது இத்தனை பேரா? இரவோடு இரவாக ஜெராக்ஸ் போட்ட ரர.கள்! யார் வேலையா இருக்கும்?

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க சுமார் 2500 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அட்டை வழங்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் கலர் ஜெராக்ஸ் மற்றும் போலி பாஸ்களுடன் வந்திருப்பதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Recommended Video

    AIADMK பொதுக்குழு கூட்டம் | EPS VS OPS | Oneindia Tamil

    சென்னையை அடுத்த வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், சிறப்பு தீர்மானம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றக் கூடாது எனவும் உத்தரவிட்டது.

    சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு இன்று கூடவுள்ள நிலையில், தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடக்கிறது.

    திருச்சியை வைத்து பிரமாண்ட திட்டம்.. அதிமுக பொதுக்குழுவின் 23 தீர்மானங்களில் இதுவும்? கசிந்த தகவல்! திருச்சியை வைத்து பிரமாண்ட திட்டம்.. அதிமுக பொதுக்குழுவின் 23 தீர்மானங்களில் இதுவும்? கசிந்த தகவல்!

    பொதுக்குழு தீர்மானங்கள்

    பொதுக்குழு தீர்மானங்கள்

    இன்று நடக்கும் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த தீர்மானங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கட்சியின் வரவு செலவு கணக்கும் பொருளாளர் பதவியை வகிக்கும் ஓபிஎஸ்ஸிடம் வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர் தொண்டர்களிடம் வாசிக்க உள்ளார். அதன் பின்னர் வழக்கமான சம்பிரதாயங்களுக்கு பிறகு தீர்மானங்கள் வாசிக்கப்படும்.

    பலத்த பாதுகாப்பு

    பலத்த பாதுகாப்பு

    இதற்காக ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வானகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கூடியுள்ளனர். இதன் காரணமாக அதிமுக பொதுக்குழு தொடர்பாக அதிகாலை தீர்ப்புக்குப் பின்னர் தற்போது ஆயிரக்கணக்கான போலீசார் சென்னை வானகரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்பின் கீழ் அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன.

    அதிகரித்த எண்ணிக்கை

    அதிகரித்த எண்ணிக்கை

    இந்நிலையில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பொதுக் குழு உறுப்பினர்களாக இருந்த 2550 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியானது. அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க திட்டமிட்டு இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு அனுமதி அட்டை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுக்குழுவில் அனுமதித்த எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கை விட அதிக எண்ணிக்கையில் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    போலி பாஸுடன் தொண்டர்கள்

    போலி பாஸுடன் தொண்டர்கள்

    இதையடுத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டபோது ஏராளமானோர் போலி பாஸ்களுடன் வந்திருப்பது தெரிய வந்தது. ஒருசிலர் பாஸ்கள் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டிருந்ததும், மற்றவை ஒரிஜினல் போலவே பிரிண்ட் செய்யப்பட்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்களும் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடைய பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திடும் ரிஜிஸ்டரையும் எடுத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    With only about 2,500 members being issued permits to attend the AIADMK aiadmk general body meeting, there has been great excitement over reports that a large number of people have come in with color xeroxes and fake passes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X