சாலைகளில் திடீரென.. வானவில் போல ஒளிரும் விளக்குகள்.. இதுதான் ரொம்ப முக்கியம்.. டிரைவர்கள் கவனம்
சென்னை: சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில், சீன அரசு அதிநவீன லேசர் தொழில்நுட்பத்தை நெடுஞ்சாலைகளில் நிறுவியுள்ளனர்.
உலகம் முழுக்க விபத்துகளை தடுக்க பல விதமான முறைகள் பின்பற்றி வருகின்றன. முக்கியமாக சாலைகளில் பல விதமான விளக்குகள், டேஞ்சர் லைட்டுகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் இதேபோல் டேஞ்சர் லைட்டுகள், டிராபிக் சிக்னல்கள் பொருத்தப்பட்டு விபத்துகள் தடுக்கப்படும்.

இந்த நிலையில்தான் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில், சீன அரசு அதிநவீன லேசர் தொழில்நுட்பத்தை நெடுஞ்சாலைகளில் நிறுவியுள்ளனர். வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர்கள் தூங்குவதைத் தடுக்க இது செய்யப்படுகிறது. சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றின் மூலம் இந்த புதிய திட்டம் இந்தியாவிலும் டிரெண்டாகி வருகிறது.
மக்கள் தங்கள் கார்களை ஓட்டும்போது நெடுஞ்சாலைகளில் இந்த லேசர் விளக்குகள் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒளிரும். இந்த விளக்குகளை பார்க்கும் போது தானாக டிரைவர்களின் தூக்கம் கலையும். Qingdao-Yinchuan எக்ஸ்பிரஸ்வேயில் இந்த விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. கலர் கலராக விளக்குகள் மேலே ஒளிரும்.. இது தலைக்கு மேலே கார்களுக்கு மேலே செல்லும்.

வீடியோ டிரெண்டிங்: இதனால் சீனாவின் நெடுஞ்சாலைகள் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பானவையாக மாறி உள்ளன. இந்த லேசர் விளக்குகள் விபத்துகளின் அபாயத்தை கணிசமாகக் குறைத்துள்ளது. முக்கியமாக இந்த குறிப்பிட்ட சாலைகள் தூக்கம் காரணமாக வாகனங்கள் நேரடியாக போய் எதிலாவது மோதுவது தடுக்கப்படும், என்றும் சீனா தெரிவித்துள்ளது.
Qingdao-Yinchuan எக்ஸ்பிரஸ்வேயில் எடுக்கப்பட்ட வீடியோதான் தற்போது டிரெண்டாகி வருகிறது. வாகனங்களுக்கு மேலே ஒளிக்கப்படும் இந்த லேசர் விளக்குகள் கார்களுக்கு மேலே செல்வது போன்ற தோற்றத்தை உருவாக்கும்.
இது டிரைவர்களுக்கு விரைவாக புத்துயிர் அளித்து, சோர்வை நீக்கி.. இரவு நேரத்தில் எளிதாக டிரைவிங் செய்ய காரணமாக அமையும். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது 44 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
கலர் கலரான விளக்குகளை பார்த்து டிரைவர்கள் கவனம் மாறும். இதனால் தூக்கம் கலையும். தூக்கம் உடனே உடையும். எனவே டிரைவர்கள் எளிதாக பயணம் செய்ய முடியும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
Lasers being used to prevent drivers from falling asleep on Chinese highwaypic.twitter.com/j9cxdFkXBA
— Science girl (@gunsnrosesgirl3) November 6, 2023
குழப்பம்: அதே சமயம் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஆரம்பித்துள்ளது. இது ஒரு சிறந்த யோசனை என்று பலர் நம்பினாலும், மற்றவர்கள் தங்கள் சொந்த ஆலோசனைகளை வழங்க தொடங்கி உள்ளனர். இது ஓட்டுனர்களைக் குழப்பும், பலரும் கவனம் சிதறல் காரணமாக விபத்தில் சிக்குவார்கள் என்று நெட்டிசன்கள் பலரும் பரிந்துரைத்து உள்ளனர்.
தேவையில்லாமல் கலர் கலராக இருக்கும் விளக்கு காரணமாக நெட்டிசன்கள் குழம்பி உள்ளனர். இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே தூக்க கலக்கத்தில் இருக்கும் டிரைவர்கள் மேலும் குழம்ப வாய்ப்பு உள்ளது.
விளக்கை பார்த்தால் அவர்கள் கண்டிப்பாக குழப்பம் அடைவார்கள். வேகமாக செல்லும் போது திடீரென இப்படி விளக்கு வருவதால் அவர்கள் கண்டிப்பாக கவன சிதறலுக்கு உள்ளாவார்கள். அதேபோல் அவர்களின் கண்கள் குழப்பத்திற்கு உள்ளாகும்.
இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் கூட உள்ளன என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து உள்ளனர்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications