நாளை சூரிய கிரகணம்.. ஆனால் அதைவிட முக்கியமான நாள்! என்னனு தெரிஞ்சுக்கோங்க!
சென்னை: இந்த ஆண்டுக்கான கடைசி சூரிய கிரகணம் நாளை நடக்க இருக்கிறது. இது முழு சூரிய கிரகணமாக இல்லாமல், பகுதி சூரிய கிரகணமாக இருக்கும் என்று வானியல் ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். அதேபோல மற்றொரு விஷயத்திற்காக நாளைய தினம் முக்கியமானதாக இருக்கிறது.
இந்த மாதம் தொடக்கத்தில் நடந்திருந்த சந்திர கிரகணம் உலகம் முழுவதும் கவனம் பெற்று இருந்தது. ஒவ்வொரு முறையும் சந்திர கிரகணம் நடந்து அடுத்த சில நாட்களிலேயே சூரிய கிரகணம் நடக்கும். அதன்படி நாளை சூரிய கிரகணம் நடக்க இருக்கிறது.

ஆனால், சந்திர கிரகணத்தை போல சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து நம்மால் பார்க்க முடியாது. ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் சில பகுதிகளில் வசிப்பார்களால் சூரிய கிரகணத்தை தெளிவாக பார்க்க முடியும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும்.
இந்த நிகழ்வின் போது சந்திரன் பூமியின் மீது நிழலை பரப்பும். இதனால் சூரிய ஒளி பூமிக்கு வராமல் சில நிமிடங்கள் தடுக்கப்படுகிறது. முழு சூரிய கிரகணத்தின் போது சூரியன் முழுவதுமாக மறைந்து, மோதிரம் போல காட்சி தரும். ஆனால் நாளை நடைபெறும் சூரிய கிரகணம் முழு சூரிய கிரகணம் கிடையாது.
இந்த கிரகணம் இந்திய நேரப்படி நாளை இரவு 10.59 மணிக்கு தொடங்கி, நாளை மறுநாள் அதிகாலை 1.11 மணிக்கு உச்சத்தை அடைந்து, அதிகாலை 3.23 மணிக்கு முடிவடையும். இந்தியாவில் சூரிய கிரகணம் இரவில் நடப்பதால் நம்மால் அதை பார்க்க முடியாது. இந்த ஆண்டில் 2 பகுதி சூரிய கிரகணங்கள் மற்றும் 2 முழு சந்திர கிரகணங்கள், என மொத்தம் 4 கிரகணங்கள் நிகழ்ந்தன. நாளை நடப்பது இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகும்.
நாளைய தினம் பகல் 12 மணி நேரமும், இரவு 12 மணி நேரமும் ஏறத்தாழ சரியாக இருக்கும். மற்ற நாட்களில் நேரம் மாறுபாடுகள் இருக்கும். அந்த வகையில் நாளை முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. பகலிரவு சரியாக இருக்கும் தினத்தில் சூரிய கிரகணம் நடப்பதால், இந்த கிரகணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்திருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு சூரிய கிரகணங்கள் நடக்க இருக்கின்றன. இதை இந்தியாவிலிருந்து பார்க்க முடியாது. ஆனால் 2027 ஆம் ஆண்டு நடக்கும் சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்கலாம்.
-
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications