ப்ளீஸ்.. ரஜினி சார் இதையாவது செய்யணும்.. லதா ரஜினியின் ஆசிரமம் பள்ளி ஊழியர்கள் திடீர் போராட்டம்
ரஜினியின் ஆசிரமம் பள்ளி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
சென்னை: ஒன்றரை வருடங்களாகவே ஊதியம் தரவில்லை என்று, லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆசிரமம் பள்ளி ஊழியர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ஆஷ்ரம் பள்ளி செயல்பட்டு வருகிறது... இதை லதா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார்..
இந்த பள்ளி குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவருவது வழக்கம்.. கடந்த வருடம், லதா நடத்தும் ஆஸ்ரம் பள்ளி காலி செய்வது தொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது...

வாடகை பாக்கி
ரூபாய் 1.99 கோடி வாடகை பாக்கி செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு, அதற்கு லதா ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம் தந்து, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது... இந்நிலையில், இன்னொரு புகார் கிளம்பி உள்ளது... ஒன்றரை ஆண்டுகளாக அங்கு பணிபுரியம் ஊழியர்களுக்கு ஊதியம் தரவில்லையாம்..

ஆர்ப்பாட்டம்
சென்னை வேளச்சேரியில் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வருகிறது.. இதில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்... இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடகாலமாகவே ஊதியம் வழங்கவில்லை என் புகார் எழுந்துள்ளது... அதனால், பள்ளி நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டித்து ஊழியர்கள் இன்று பள்ளி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வருமானம்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஊழியர்கள், "கொரொனோ காலகட்டத்தில் தங்களுக்கான முறையான ஊதியத்தை வழங்காமல் பள்ளி நிர்வாகம் எங்களை வஞ்சிக்கிறது.. சம்பளத்தை பற்றி கேட்டாலே இழுத்தடிக்கிறார்கள்.. நாங்கள் வருமானம் இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகிறோம்..

ஊதியம்
அதனால், நாங்கள் படும் கஷ்டத்தை மனதில் கொண்டு, ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த பணத்திலிருந்து தங்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்.. ஊழியர்களுக்கு நிர்வாகம் வழங்க வேண்டிய பங்களிப்பு தொகையும் எங்களுக்கு இதுவரை வந்து சேரவில்லை.. அதை பற்றி கேட்டாலும் உரிய பதில் எங்களுக்கு கிடைப்பதில்லை." என்று பள்ளி ஊழியர்கள் அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டினர்.

சம்பளம்
இப்படித்தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பும் இதே போன்ற பிரச்சனை ஏற்பட்டது.. 4 வருடங்களுக்கு முன்பு, சம்பளம் தரவில்லை என்று ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள்.. ஊழியர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்காமல் உள்ளதாக சொல்லி, பள்ளியின் வாகன ஓட்டுனர்கள் பள்ளி வாகனங்களை இயக்காமல், போராட்டத்தில் ஈடுபட்டனர்..

கொந்தளிப்பு
அதே போல் ஆசிரியர்கள் சம்பளம் தராததால் கொந்தளித்து பள்ளி வளாகத்திலேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.. இதற்கு பிறகு பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் மற்றும் அங்கு பணியில் இருந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது... இப்போது மீண்டும் அதுபோலவே ஒரு பிரச்சனை கிளம்பி உள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications