தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது..ராணுவ வீரர் உயிரிழந்தது தற்செயலாக நடந்தது..கே.எஸ் அழகிரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது. ராணுவ வீரர் உயிரிழந்தது தற்செயலாக நடந்தது. மோடியின் ஆட்சியில் அதானிதான் வளர்ந்து இருக்கிறார். நாடு விழுந்துருக்கின்றது. தற்போது அதுதான் நடந்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மோடியின் ஆட்சியில் அதானிதான் வளர்ந்து இருக்கிறார். நாடு விழுந்துருக்கின்றது. தற்போது அதுதான் நடந்துள்ளது. பொதுமக்கள் பணத்தில் இயங்கக்கூடிய பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சி ஆகிய பொதுத்துறை நிறுவனம் 50 ஆயிரம் கோடியை தொகையை இழந்து இருக்கின்றன.

அமெரிக்கா வரை பரவி விட்டது

அமெரிக்கா வரை பரவி விட்டது

இந்த நிறுவனங்களை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய பிரதமர் அலுவலகத்தில் இருந்தே அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் முறைகேடு அமெரிக்கா வரை பரவி விட்டது. பிரதமர் மோடி இது பற்றி வாய் திறந்து பதில் சொல்லவில்லை. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தெளிவான பதிலை அளிக்கவில்லை. அமித்ஷாவும் இதற்கு பதில் அளிக்காமல் காஷ்மீரில் வன்முறை குறைந்து இருக்கிறது என்கிறார்.

சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது

சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் உயிரிழந்தது தற்செயலாக நடந்தது. இதில் தொடர்புடை திமுகவை சேர்ந்த நபர் மீது சட்டம் அதன் கடமையை செய்யும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது. தஞ்சாவூர் விக்கிரவாண்டி சாலைப் பணிகளும் மிகவும் தாமதமாக மோசமாக நடைபெற்று வருகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நடக்குமா நடக்கதா என்பது பற்றி பேச்சுப்போட்டியே வைக்கலாம்.

எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்சும்

எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்சும்

இதற்கெல்லாம் தமிழகத்தில் இருக்கும் பாஜகவினர் போராடவில்லை. தங்கள் செல்வாக்கை பயன்படுத்தவும் மறுக்கின்றனர். அவர்களுக்கு அவர்கள் கட்சியில் செல்வாக்கு உள்ளதா என்பது கூடட் தெரியவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்சும் ஒன்றாக உள்ளது போல தெரியவில்லை. தனித்தனியாகத்தான் இருக்கின்றனர். ஈரோட்டில் நாங்கள் மகத்தான வெற்றி அடைவோம். திமுக ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் சான்றிதழ் இந்த ஈரோடு இடைத்தேர்தல். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக தோல்வி பயத்தால்..

அதிமுக தோல்வி பயத்தால்..

முன்னதாக கே.எஸ் அழகிரி அளித்து இருந்த பேட்டியில் அதிமுக தோல்வி பயத்தில் இருப்பதாக சாடியிருந்தார். இது தொடர்பாக கே.எஸ் அழகிரி கூறுகையில், "அதிமுக தோல்வி பயத்தால் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. ஜெயக்குமார் எதை வேண்டும் என்றாலும் சொல்வார். பணம் கொடுக்கிறதால் யாரும் ஓட்டு போட மாட்டார்கள். எவ்வளவோ தேர்தலில் எவ்வளவோ பேர் பணம் கொடுத்து தோற்றுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய ஆதரவு இருந்தால்தான், நாம் சொல்வதை மக்கள் ஏற்றுக்கொண்டால்தான் விரும்பினால் மட்டும்தான் வெற்றி பெற முடியுமே தவிர வெறும் பணபலத்தால் மட்டுமே வெற்றி பெற முடியாது. அப்படி பார்த்தால் அதிமுகவிற்கு கொங்கு மண்டலத்தில் இருக்கும் பண பலம் அளவிற்கு வேறு யாருக்கும் கிடையாது" என்று அதிமுகவை காட்டமாக விமர்சித்து இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+