'ஜெயலலிதா அன்பை பெற்ற.. மதுசூதனனின் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு..' ஈபிஎஸ் & சசிகலா இரங்கல்
சென்னை: உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று (ஆகஸ்ட் 5) உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
அதிமுக அவைத்தலைவரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன், கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பிர்சிசனைகளை எதிர்கொண்டு இருந்தார்.
இதற்காகத் தொடர்ந்து சிகிச்சையும் பெற்று வந்தார். இந்தச் சூழலில் கடந்த ஜூலை மாதம் மதுசூதனனுக்கு, திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினையை ஏற்பட்டது.

மதுசூதனன் காலமானார்
இதனால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், 80 வயதான மதுசூதனன், சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 5) காலமானார். எம்ஜிஆர் ரசிகர் மன்றத்திலிருந்து அதிமுகவில் நுழைந்த மதுசூதனன், ஜெயலலிதா தலைமையிலான முதல் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தவர்.

எடப்பாடி பழனிசாமி
அதேபோல எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், "எம்ஜிஆர் காலம் தொட்டு கழகத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட கழக மூத்த முன்னோடி, ஜெயலலிதா அன்பை பெற்றவர், கழக அவைத்தலைவர் அருமை அண்ணன் மதுசூதனன் அவர்களின் மறைவு செய்தியறிந்து ஆற்றொண்ணா பெருந்துயரும் சொல்லொண்ணா சோகமும் அடைந்தேன். அண்ணன் மதுசூதனன் மறைவு கழகத்திற்கு மட்டுமல்லாது தமிழகத்திற்கே ஒரு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

சசிகலா
சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மதுசூதனன் மறைவு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் எத்தனையோ சோதனையான காலகட்டங்களில் துணை நின்றவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இடத்தில் மிகுந்த பாசம் கொண்டவர். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும், 2007ஆம் ஆண்டு முதல் அவைத் தலைவராகவும் இருந்த போதும் தன்னை ஒரு எளிய தொண்டனாகவே வாழ்ந்து காட்டியவர். அவர் மறைவு செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அனைத்து தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

கமல்
மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் தனது ட்விட்டரில், "அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் இயற்கை எய்திய செய்தி கேட்டு வருத்தமுற்றேன். இளவயதிலேயே புரட்சித்தலைவரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். சுமார் அறுபதாண்டு கால அரசியல் அனுபவம் கொண்டவர்.மதுசூதனனின் குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
-
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா?












Click it and Unblock the Notifications