"உடனே வெளியேறுங்கள்".. முதல்வர் ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சாமி திடீர் கடிதம்.. என்ன நடந்தது?
சென்னை: அறநிலையத்துறை செயல்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி முக்கியமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
கோவில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேறவேண்டும் என்று வலதுசாரி அமைப்புகள் சில கோரிக்கைகள் வைத்து வருகின்றன. பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட கோவில் நிர்வாகத்தை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வருகின்றன.
ஆனால் கோவிலில் சமத்துவம் நிலவ, அனைத்து சாதியினரும் சமமாக நடத்தப்பட, முறைகேடுகள் நடக்காமல் இருக்க அரசு இதில் தலையிட்டால்தான் சரியாக இருக்கும். அறநிலையத்துறை கோவில்களை கட்டுப்படுத்தினால்தான் சரியாக இருக்கும் என்றும் வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

அறநிலையத்துறை
அறநிலையத்துறை கலைக்க வேண்டும், கோவில்களை அரசு கட்டுப்படுத்த கூடாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இந்தநிலையில்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி முக்கியமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. இதை கட்டுப்பாட்டில் எடுப்பது தொடர்பான வழக்கில் 2014 ஜனவரி 6ம் தேதி உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு வழங்கியது. அதில், இரண்டு முக்கியமான விஷயங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிதம்பரம்
சிதம்பரம் பொது தீட்சிதர்கள், 'சீர்மரபினர்' என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது சரிதான் என்று உறுதி செய்தது. அதை மாற்றுவதற்கு இடமே இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது, இந்த கோவிலை தீட்சிதர்கள் பல நுாற்றாண்டுகளாக நடத்தி வருகின்றனர். கோவில் நன்றாக இருக்கிறது. கோவிலில் எந்த சீர்கேடும் இல்லை. அப்படி இருக்கும் போது அதை அறநிலையத்துறை கையில் எடுக்க முடியாது. நிர்வாகத்தில் பிரச்சனை இருந்தால் மட்டுமே அறநிலையத்துறை கோவிலை கையில் எடுக்க முடியும். அப்படியே தவறு இருந்தாலும், அறநிலையத்துறை மொத்தமாக கோவிலை கட்டுப்படுத்த முடியாது. நிர்வாக தவறுகளை சரி செய்த பின் அதை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அறநிலையத் துறைச் சட்டப் பிரிவு 45 என்ன சொல்கிறது என்றால், நியமனம் விதிகள் இயற்றப்படவில்லை என்றால் செயல் அலுவலர் நியமனம் செல்லாது.

கடிதம்
அதேபோல் செயல் அலுவலர் ஏன் நியமிக்கப்படுகிறார் என்றும் சொல்ல வேண்டும். இல்லையென்றால் அந்த உத்தரவும் செல்லாது. வைத்தீஸ்வரன் கோவில் வழக்கில் உச்ச நீதிமன்றம் 1965ல் இதே உத்தரவை பிறப்பித்து உள்ளது. இப்படி செயல் அலுவலர் நியமிக்கப்பட்டாலும், சில காலத்திற்கு மட்டுமே அவர் செயல்பட முடியும். நிரந்தரமாக ஒரு செயல் அலுவலர் கோவிலை கட்டுப்படுத்த முடியாது. இதன் அடிப்படையில்தான் 2014ல் சிதம்பரம் கோவில் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்புகளை தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டும்.

சுப்பிரமணியன் சாமி
உச்ச நீதிமன்ற விதிப்படி அரசுகள் செயல்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது. அரசியல் சாசன சட்ட பிரிவு இதைத்தான் சொல்கிறது. இந்த தீர்ப்புகள் அடிப்படையிலும், அரசியல் சாசன விதிகள், 25, 26ன் படியும் கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிட கூடாது. கோவில் நிர்வாகத்தில் இருந்து அரசு வெளியேற வேண்டும். தமிழ்நாடு கோவில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும். இல்லையென்றால் அது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானதாக கருதப்படும். நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும், என்று சுப்பிரமணியன் சாமி முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications