எடப்பாடி என்னை அழைத்தார்.. அதிமுகவிலிருந்து வெளியேறியது வருத்தம்! பாஜக நயினார் நாகேந்திரன் பரபரப்பு
சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேறியது நெருடல் அளிக்கிறதா என்று கேட்டால் ஆம் நெருடல் அளிக்கிறது. எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக அதிமுக இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டு வருகின்றன.இந்த மோதலின் உச்ச கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக தலைவர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்வேன் என்று கூறி உள்ளாராம் அண்ணாமலை.
சமீபத்தில் பாஜக கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தமிழ்நாடு அரசியலில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை பேசியதாக கூறப்படும் இந்த விஷயங்கள்தான் அரசியல் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. சமீபத்தில் பாஜக நிர்வாகிகள் நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இணைந்தனர். வரிசையாக அதிமுகவில் நிர்வாகிகள் பலர் இணைந்தனர். இதையடுத்து அதிமுக மீது பாஜகவினர் கடுமையான புகார்களை வைத்தனர்.

என்ன சொன்னார்
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து வெளியேறியது நெருடல் அளிக்கிறதா என்று கேட்டால் ஆம் நெருடல் அளிக்கிறது. எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய தலைமுறை சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், பாஜகவில் பயணிப்பதில் எனக்கு வருத்தம் இல்லை. நெருடல் இல்லை. ஆனால் அதிமுகவில் இருந்து வெளியேறியது நெருடல் அளிக்கிறதா என்று கேட்டால் ஆம் நெருடல் அளிக்கிறது. எனக்கு வருத்தம் அளிக்கிறது. முக்கியமாக என்னை ஜெயக்குமார் மீண்டும் கட்சிக்குள் அழைத்தார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி மீண்டும் கட்சிக்குள் அழைத்தார். எனக்கு எடப்பாடி பழனிசாமி நெருங்கிய நண்பர். எனக்கு அவர் மிகவும் நெருக்கம்.

எடப்பாடி
என்னை ஏற்கனவே எடப்பாடி மீண்டும் கட்சிக்குள் அழைத்தார்.எடப்பாடி பழனிசாமியா, ஓ பன்னீர்செல்வமா என்றால் நான் எடப்பாடியைத்தான் சொல்வேன். ஏன் என்றால் எடப்பாடி எனக்கு நெருங்கிய நண்பர். சொல்லப்போனால் நான் தொழிற்துறை அமைச்சராக இருந்த போது எனக்கு கீழ் 15 பிரிவுகள் இருந்தன. அந்த கார்பரேஷனில் எடப்பாடி சேர்மேனாக இருந்தார். அப்போது அவர் தேர்தலில் வெற்றிபெறவில்லை. அவர் என்னைவிட சீனியர்தான். ஆனாலும் தேர்தலில் வெற்றிபெறவில்லை என்பதால் அவர் அந்த பொறுப்பில் இருந்தார்.

நெருக்கம்
அப்போது எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருந்தேன். அவருடன் நெருக்கம் இருக்கிறது. ஆனால் அதிமுகவில் இணைய மாட்டேன். மீண்டும் அதிமுகவில் சேர மாட்டேன். அவர் என்னை அழைத்தார். ஆனாலும் சேர மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அதிமுகவில் இனியும் சேர மாட்டேன். திமுகவில் சேரவும் வாய்ப்புகள் இல்லை. அப்பாவு அழைத்தாலும் செல்ல மாட்டேன். யார் அழைத்தாலும் செல்ல மாட்டேன்.

அரசியல்
நான் அரசியல் ரீதியாக சிலருடன் நட்புடன் இருக்கிறேன். சிலருடன் அன்பாக இருக்கிறேன். அரசியல் கடந்து நட்பாக இருக்கிறேன். அதனால் நான் கட்சி மாற போவதாக சிலர் சொல்கிறார்கள். அதிமுகவில் இருந்தே போதே நான் திமுக செல்வேன் என்று கூறினார்கள். நான் யாரிடமும் உதவி செய்யுங்கள் என்று சிபாரிசு கேட்க மாட்டேன். அதை கேட்காமல் நட்பாக மட்டுமே இருப்பேன். அதனால் என்னை பற்றி அப்படி பேசுகிறார்கள், என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications