கலாக்ஷேத்ரா விவகாரம்.. சர்ச்சை பதிவுக்கு 3 ஆண்டுகளுக்கு பின் வருத்தம் தெரிவித்த லீலா சாம்சன்! பின்னணி
சென்னை: கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் இயக்குநரான லீலா சாம்சன் 3 ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட பேக்புக் போஸ்ட்டிற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த 2022 டிசம்பரில் அவர் தனது பேஸ்புக் பதிவில் ஒரு மாணவியின் பெயரைத் தவறாகக் குறிப்பிட்டு சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே அந்த போஸ்ட்டிற்கு அவர் இப்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள புக்பெற்ற கலாஷேத்ரா அறக்கட்டளையில் இதற்கு முன்பு இயக்குநராக இருந்தவர் லீலா சாம்சன். இவர் கடந்த 2022ம் ஆண்டு தனது பேஸ்புக் தளத்தில் சில பகீர் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். அதில் மாணவி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்ட லீலா சாம்சன், கலாஷேத்ராவில் பணியாற்றும் ஒரு ஆசிரியரையும் விமர்சித்துப் பதிவிட்டிருந்தார்.

லீலா சாம்சன் வருத்தம்
அவரது போஸ்ட் அப்போது இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதற்கிடையே மூன்று ஆண்டுகள் கழித்து லீலா சாம்சன் இப்போது தனது போஸ்ட்டிற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பதிவில், "கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவியும், தற்போது ஆசிரியராகவும் இருக்கும் பெண்ணை பற்றி பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தேன்.
அதில் ஒரு ஆண் ஆசிரியருடன் தொடர்புப்படுத்தி அவரது பெயரைத் தவறாகக் குறிப்பிட்டிருந்தேன். அந்த தவறுக்கு நான் வருந்துகிறேன். எதிர்காலத்தில் அவரைப் பற்றி நான் எந்தக் கருத்தும் தெரிவிக்க மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த போஸ்ட் இப்போது முக்கிமயானதாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க 3 ஆண்டுகளா? என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பின்னணி!
முன்னதாக லீலா சாம்சனின் 2022 போஸ்ட் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்திருந்தார். தனது பெயரைத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டதால், தனது வாழ்க்கையும் தொழிலும் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், லீலாவின் குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் மிகுந்த மன உளைச்சல், மன வேதனை மற்றும் தனது நற்பெயருக்குச் சேதம் ஏற்பட்டதாக அந்த மாணவி குற்றஞ்சாட்டியிருந்தார். இது தொடர்பாக சிவில் மற்றும் கிரிமினல் புகார்கள் அளிக்கப்பட்டது.
அதேநேரம் இரு தரப்பிற்கும் இடையே சமரச முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சியிலேயே மோதல் தீர்க்கப்பட்டது. அதன்படி லீலா சாம்சன் தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும், இரு தவணைகளாகப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எட்டு லட்ச ரூபாய் வழங்கவும் ஒப்புக்கொண்டார். இதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட பெண் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டார். அதன்படியே இப்போது லீலா சாம்சன் தனது பதிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
சின்மயி
முன்னதாக லீலா சாம்சனின் 2022ல் இந்த குற்றச்சாட்டுகளைப் பதிவிட்ட போது, உண்மை என்ன என்பதை விசாரிக்காமலேயே பலரும் அதைப் பகிர்ந்தனர். பிரபல பின்னணி பாடகியான சின்மயியும் அந்த போஸ்ட்டை பகிர்ந்திருந்தார். லீலா சாம்சனின் போஸ்ட்டை பகிர்ந்த சின்மயி. "கலாஷேத்ராவில் மைனர்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த ஒரு ஆண் ஊழியரைப் பற்றி லீலா சாம்சனின் பதிவு இது" என்று அந்த போஸ்ட்டை பகிர்ந்திருந்தார்.
அதன் பிறகு லீலா சாம்சன் தனது போஸ்ட்டை டெலிட் செய்த போதிலும், ஒரு மாதம் கழித்து மீண்டும் சின்மயி தனது ட்விட்டரில் இந்த விவகாரத்தை எழுப்பியிருந்தார். அதில் அவர், "தயவு செய்து இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசுங்கள்.. கலாஷேத்ராவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரைப் பற்றி லீலா சாம்சன் கூறியிருந்தார். இருப்பினும். அவர் (லீலா) அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டார். கர்நாடக இசை, பரதநாட்டியம் போன்ற துறைகளில் பாலியல் குற்றவாளிகள் தண்டனையின்றி தப்பிப்பது ஒன்றும் புதிதல்ல" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது!
லீலா சாம்சனின் அந்த போஸ்ட் இணையத்தில் சர்ச்சையான நிலையில், அது பெரிய மாணவர் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இதனால் அப்போது கலாஷேத்ரா தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட அந்த ஆண் ஊழியர் கைது செய்யப்பட்டார். இருப்பினும், போலீசார் உரியக் காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறியதால் அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது?












Click it and Unblock the Notifications