வேலையைக் காட்டிய வேந்தர்.. வேகமாக வெளியேறிய ஆதவ் மாமியார்! எடப்பாடி போட்ட பலே ப்ளான்! அடுத்து என்ன?
சென்னை: பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியிலிருந்து விலகுவதாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வேளாண்மை பிரிவு பொதுச்செயலாளர் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ் மார்ட்டின் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கட்சி நிதி என பல கோடிகளை கறந்து விட்டு 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என தெரிந்து தான் அவர் கட்சியில் இருந்து விலகிய நிலையில் வரும், 20ஆம் தேதி பெரும் படையுடன் அதிமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக மட்டுமல்லாது கடந்த சில நாட்களாகவே புதுச்சேரி அரசியலிலும் பேசப்படும் ஒரு பெயராக மாறி உள்ளது மார்ட்டின் குடும்பம். தமிழகத்தில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டிருந்த போதிலும் மறைமுகமாக அது இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் ஒவ்வொரு நாளும் புரளுகிறது. அதற்கு முன்னதாக தமிழகத்தில் வெளிப்படையாகவே லாட்டரி சீட்டு விற்கப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் லாட்டரி விற்பனைக்கு அப்போதைய முதலமைச்சரான ஜெயலலிதா தடை விதித்தார்.

மார்ட்டின் குடும்பம்
பின்னர் தமிழ்நாட்டிலிருந்தே ப்யூச்சர் கேமிங் நிறுவனம் மூலம் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் முதலீடு செய்து வந்திருக்கிறார் மார்ட்டின். அவரது குடும்பமும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைவருக்கும் தெரிந்த முகங்கள் தான். அவரது மகனான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரி பாஜகவில் இருந்தார். பிறகு விலகி லட்சிய ஜனநாயக கட்சி என்ற கட்சியை புதுச்சேரியில் தொடங்கி இருக்கிறார். மருமகனான ஆதவ் அர்ஜுனா வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்தின் மூலம் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுகவுக்கு வேலை பார்த்தார்.
ஆதவ் அர்ஜுனா
பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த அவர் அந்த கட்சியில் இருந்து வெளியேறி தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். இதற்கிடையே இப்போதைக்கு அரசியலில் பரபரப்பாக பேசப்படுவது இவர்கள் யாரும் அல்ல.. மார்ட்டினின் மனைவியான லீமா ரோஸ் மார்டின் தான். முதலில் பாஜகவில் பயணித்த அவர் 11 ஆண்டுகளுக்கு முன்பு பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது அவருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவியும், பாரிவேந்தரின் மகன் ரவி பச்சமுத்து அரசியலுக்கு வந்ததும் இணைப் பொதுச் செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது.
லீமா ரோஸ் மார்ட்டின்
இதனையடுத்து பல தேர்தல்கள், கட்சி நிகழ்ச்சிகளுக்கு தண்ணியாக பணத்தை செலவழித்தார் லீமா ரோஸ். சமீபத்தில் நடந்த மாநாட்டில் கூட மூன்று 'c'களை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜகவிடம் மூன்று சீட்டுகளை கேட்டு பெற்றிருக்கும் ஐஜேகே அதில் தனது குடும்பத்தினரை நேரடியாக களம் இறக்க முடிவு செய்வதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த லீமா ரோஸ் நேரடியாக எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.
ஐஜேகே விலகல்
மேலும் அவரது ஆதரவாளர்கள் திருவாடானை தொகுதியில் போட்டியிட வேண்டும் என விருப்பமனு தாக்கல் செய்தனர். கோபமடைந்த ஐஜேகே தலைமை அவரை ஒதுக்க ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை விட்டார். இந்த நிலையில் அவர் தனிக் கட்சி தொடங்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே தனி கட்சி ஆரம்பிக்க வேண்டாம்.
எடப்பாடி திட்டம்
அதிமுகவில் நேரடியாக சேர்ந்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி சொன்னதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து வரும்20ஆம் தேதி மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்று நடத்தி பெரும் தொண்டர் படையுடன் லீமா ரோஸ் அதிமுகவில் ஐக்கியமாக போவதாக தகவல்கள் உலாவுகின்றன. மகன் தனிக்கட்சி, மருமகன் ஒரு கட்சி, லீமா இன்னொரு கட்சி என மார்ட்டின் குடும்பம் மும்முனை அரசியல் களத்தில் நிற்கிறது.
-
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
லால்குடி தண்டவாளத்தில் தலை வைத்த மன்சூர் அலிகான்.. கலைஞர் ஞாபகம் வந்துருச்சு சார்.. வியந்த திருச்சி -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
பாலில் விழுந்த மாம்பழம்.. அன்புமணி கைக்கு மொத்தமாய் போன பாமக! வலை போட்டு வேட்பாளர்களை தேடும் அய்யா! -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்! -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications