எப்போது வேண்டுமானலும் நின்று போகலாம்.. இதயத்தை இயங்க வைக்க போராடும் சிறுமி! உதவுங்கள் ப்ளீஸ்
சென்னை: தருமபுரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி லீனா ஆரோனியா, அரிய வகை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிரைக் காக்க அவசர இதய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. நாம் நினைத்தால் இந்த சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியும். எனவே நம்மால் முடிந்த உதவியைச் செய்வோம்.
தருமபுரி அரசு மருத்துவமனையில் மியாட் மருத்துவமனை நடத்திய இலவச இதய பரிசோதனை முகாமில் லீனா பங்கேற்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனையில், அவருக்கு இதயத்தில் 'Patent Ductus Arteriosus' (PDA) எனப்படும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது இதயத்தில் உள்ள ஒரு சிறிய துளை போன்ற பாதிப்பாகும், இதனால் ரத்த ஓட்டத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனைச் சரிசெய்ய 'PDA device closure' எனும் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்த சிகிச்சையின் மூலம் லீனா எதிர்காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.
இந்த அறுவை சிகிச்சை மற்றும் அதன்பின்னர் தேவைப்படும் மருத்துவப் பராமரிப்புகளுக்கு சுமார் ரூ.1.4 லட்சம் செலவாகும். லீனாவின் தந்தை ஜோசப் பெயிண்டராக வேலை செய்கிறார். மாதம் 15,000 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டும் அவர், ஐந்து பேர் கொண்ட தனது குடும்பத்தைக் காப்பாற்றவே சிரமப்பட்டு வருகிறார். எனவே சிறுமியின் உயிரை காப்பாற்ற நம்மைப் போன்ற உதவும் கரங்களைதான் நம்பியிருக்கிறார்.

நாம் நினைத்தால் சிறுமியை காப்பாற்ற முடியும். நம்மால் முடிந்த உதவியை, உடனே செய்வதன் மூலம் சிறுமிக்கான மருத்துவ சிகிச்சையை உடனே தொடங்க வைக்க முடியும்.

உங்களால் நிதி உதவி செய்ய முடியாவிட்டாலும், இந்தச் செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பகிர்ந்து லீனாவின் உயிரைக் காக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Click it and Unblock the Notifications
