லெஜண்ட் சரவணன்.. தி.நகரில் போட்ட போடு.. "காக்கா + கழுகு".. டக்குனு பார்த்த கோடம்பாக்கம்.. ஹாட் சென்னை
சென்னை: லெஜண்ட் சரவணனின் பேச்சு, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதற்கு பலரும் திரண்டு வந்து ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன காரணம்?
சினிமாவில் நடித்து புகழ்பெற்று, ஒருகட்டத்தில் வாய்ப்புகளை இழந்துவிட்ட நிலையில், சம்பந்தப்பட்டவர்கள், அரசியலில் கால்பதித்து விடுவது வழக்கம்.. இல்லாவிட்டால் சம்பாதித்ததை வைத்து, பிசினஸில் இறங்கிவிடுவார்கள்.. ஆனால், ஒரு தொழிலதிபராகவே உயர்ந்து, அதற்கு பிறகு சினிமாவுக்குள் என்ட்ரி தந்தவர் லெஜண்ட் அருள்..

பிசினஸ் நுணுக்கங்களை இளமையிலேயே கற்று, இந்தியாவிலேயே பெரிய மல்ட்டி ஸ்டோர் கடையை கொண்டுவந்து, மக்களை திரும்பி பார்க்க வைத்தவர் அருள்.. உலகிலேயே அதிகளவு தங்கநகை டிஸ்ப்ளே செய்யும் கடையை துவங்கி வைத்து அசத்திவர் அருள்..
விமர்சனங்கள்: தன் மீதான மோசமான விமர்சனங்களை, தன் உழைப்பாலேயே முறியடித்தவர் அருள்.. எதிர்மறை விமர்சனங்களை எல்லாம் எளிதாக கடந்து சென்றதுடன், ஷாப்பிங் என்றாலே தி.நகர் என்பதை உடைத்து, சென்னையின் புறநகரான, பாடி, அம்பத்தூர் பக்கமும் பொதுமக்களை திரண்டு வர செய்தவர் அருள். வளரும் இளம் தொழிலதிபர்களுக்கு ஊக்கத்தையும், நம்பிக்கையையும் இது ஏற்படுத்தியது..
விளம்பரத்துறை மீதான நம்பிக்கையும், தன்னுடைய நிறுவனத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்கிற வர்த்தக வியூகமும்தான் இவரை வெற்றிகரமான தொழிலதிபராக உயர்த்தி காட்டி உள்ளது.

உழைப்பு: அதனால்தானோ என்னவோ நேற்றைய நிகழ்வில், "சினிமாவில் இவருக்கு இந்த பட்டம், அவருக்கு அந்த பட்டம் போன்ற விஷயங்களால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது, உழைத்தால் மட்டுமே நாம் உயர முடியும்" என்று அதிரடியாக பேசியிருக்கிறார் லெஜண்ட்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்துக்கு சென்னை கே.கே.நகரில் 2 கிரவுண்ட் பரப்பளவில் ரூ.6 கோடி செலவில் சொந்த கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழா, பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது.. தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர், தமிழிசை குத்துவிளக்கு ஏற்றி வைக்க, லெஜண்ட் சரவணன் இந்த புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
உழைப்பு: அப்போது, லெஜண்ட் சரவணன் பேசும்போது, "எந்த ஒரு நாட்டில் வியாபாரத்துறை செழிப்பாக உள்ளதோ அந்த நாட்டில் பொருளாதாரமும் மிகவும் வலிமை மிக்கதாக இருக்கும். ஏனென்றால், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பொருளாதார சுழற்சியில் வியாபாரத்துறை மிக முக்கிய பங்காற்றி வருகிறது... ஒரு வெற்றிகரமான வியாபாரத்திற்கு அதிலுள்ள உண்மைத்தனமும், கடினமான உழைப்பும் மிக முக்கியமானதாகும்.
இன்றைய மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமாத்துறை மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் அதில் காக்கா, கழுகு கதைகள், இவருக்கு இந்த பட்டம், அவருக்கு அந்த பட்டம் போன்ற விஷயங்களால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது. நாம் உழைத்தால் மட்டும் தான் உயர முடியும். நாம் உயரந்தால் மட்டும்தான் நாடும் உயரும். அன்பால் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்" என்றார் லெஜண்ட்.
அதிரடி பேச்சு: வழக்கமாக, லெஜண்ட் சரவணன் அணியும் டிரஸ்கள், கார்கள், விளம்பரங்கள் என அனைத்துமே அவரது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டுவிடும்.. அந்தவகையில், நேற்றைய தினம் அவர் பேசியிருந்த, காக்கா, கழுகு கதை பேச்சும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications