அன்னபூர்ணா ஓனர் மன்னிப்பு கேட்ட விவகாரம்! தொழிலதிபரான லெஜன்ட் சரவணன் அண்ணாச்சி சொன்னது என்ன?
சென்னை: கோவையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டது குறித்து தான் என்ன கருதுகிறேன் என்பதை லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் அருள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லெஜன்ட் சரவணன் கூறியிருப்பதாவது: கேரளாவை பொருத்தமட்டில் ஹேமா கமிட்டி அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்த கோர்ட் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என நம்புகிறேன்.

கோவையில் நடந்த ஜிஎஸ்டி ஆலோசனை கூட்டத்தில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் தனது கோரிக்கையை யதார்த்தமாக நகைச்சுவையுடன் பேசியிருந்தார். ஆனால் அவர் பேசிய கருத்துகள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உடன்பாடு இல்லை.
தனது அதிருப்தியை நிர்மலா சீதாராமன் தெரியப்படுத்தும் போது சீனிவாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதில் பெரிதுப்படுத்த எதுவும் இல்லை. எனக்கு தொழில்துறை, சினிமா, அரசியல் ஆகிய மூன்றுமே மிகவும் பிடித்தமானது. மூன்றிலும் இணைந்து பயணிப்பேன்.
என்னுடைய படம் ஆக்ஷன், திரில்லர் கலந்து இருக்கும். அரசியலில் மும்முனை போட்டி நிலவும். எந்த கூட்டணி வலுவாக இருக்கிறதோ, அந்த கட்சிதான் வெல்லும். என்னுடைய கொள்கைக்கு ஒத்து போகும் கட்சியுடன் இணைந்து நான் செயல்படுவேன். திராவிடக் கொள்கைகள் எல்லாருக்கும் பிடிக்கும்.
நான் நடிக்கும் படத்தில் மேக்கப் இல்லாமல் நடிக்கிறேன். கதாபாத்திரம் நன்றாக இருக்கும். நல்ல கதை. நான் நடித்த போன படத்திலிருந்து இது முற்றிலும் வேறுபடும். வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். தமிழகத்திற்கு எந்த தொழிற்சாலையும் வரலாம். இதுதான் என்றில்லை. தொழில் வளர்ச்சி அடைந்தால் பொருளாதாரம் வளரும். இவ்வாறு லெஜன்ட் சரவணன் தெரிவித்தார்.
லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் எனும் பெயரில் ஜவுளிக் கடை, பல சரக்கு கடை, ஹேர்பின் முதல் பேட்டரி ஏரோபிளேன் வரை அனைத்தும் அண்ணாச்சி கடைகளில் கிடைக்கும். இவை விலை குறைவாக கிடைப்பதால் பலர் சரவணா ஸ்டோர்ஸ்களில் காய்கறி, பழங்களை வாங்குகிறார்கள்.
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகள் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம், ஒரு கட்டத்தில் பெரிய தலைகள் இயங்காத நிலையில் அவர்களின் வாரிசுகள் தனியாக கடை வைத்து கொண்டனர். அந்த வகையில் உருவானதுதான் சரவணா ஸ்டோர்ஸ் பிரம்மாண்டமாய், லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஆகும். இந்த கடைகளில் வேலை வாய்ப்பு மூலம் ஏராளமானோரின் குடும்பத்தில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறார் அண்ணாச்சி. இவருக்கு சுமார் 11 சொகுசு கார்கள் உள்ளதாக தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications