இலக்கிய உலகத்துக்கு பேரிழப்பு.. ஈரோடு தமிழன்பன் காலமானார்! முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
சென்னை: தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரும் தடத்தை பதித்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமான நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். . "வணக்கம் வள்ளுவ" என்ற இவரது கவிதைத் தொகுப்பு சாகித்ய அகாடமி விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் சிறுகவிதை, ஹைக்கூ, மரபுக்கவிதை உள்ளிட்ட பல துறைகளில் தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியர் கவிஞர் ஈரோடு தமிழன்பன். 1933 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த தமிழன்பனின் இயற்பெயர் ஜெகதீசன்.
தமிழ்ப்பண்பாட்டின் ஆழமான வேர் பிடித்த பிள்ளையாக இலக்கிய உலகில் உயர்ந்த நிலையை அடைந்த இவர், மரபுக்கவிதையும் புதுக்கவிதையும் ஒரே நேரத்தில் கையாண்ட கவிஞர்களில் ஒருவர். "வணக்கம் வள்ளுவ" எனும் கவிதைத் தொகுப்பு 2004 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது.

தமிழில் ஹைக்கூ கவிதைக்கு பொதுவெளியில் தனிச்சிறப்பு கிடைக்க காரணமானவர்களில் முதன்மையானவர் இவர் என இலக்கிய வரலாறு குறிப்பிடுகிறது. பாரதிதாசன் மரபை தொடர்ந்த கவிஞராக, வானம்பாடி கவிதை இயக்கத்திலும் ஈரோடு தமிழன்பன் முக்கிய பங்கு வகித்தார். அவரது படைப்புகள் பெரும்பாலும் ஓர் அமைதியான சிந்தனையை, சமூகநேர்மையை, மனிதநேயத்தை மையப்படுத்தி வந்தன.
கவிதையைத் தாண்டியும் பல துறைகளில் அவர் தன் தடத்தை பதித்தவர். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனுபவம், அவரின் பேச்சுத் திறனுக்கும் மொழிப்புலமைக்கும் சான்று. தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தில் உறுப்பினராகவும், "அரிமா நோக்கு" என்ற ஆய்விதழின் ஆசிரியராகவும் இவர் பணியாற்றினார். தமிழ் இலக்கியத்துக்காக மட்டுமல்ல, அறிவியல் மற்றும் பொது அறிவு சார்ந்த துறைகளிலும் தமிழ் மொழியைப் பரப்ப முயன்றவர் தமிழன்பன்.
தமிழ்ப்படத்துறையிலும் ஆழமாக தடம் பதித்தவர். இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா என திரைப்படத் துறையிலும் பல்வேறு விதங்களில் பங்களித்தார். தமிழ் மொழிக்காக இடைவிடாத உழைப்பு செய்த இவர், 60 க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், ஆறு பெரும் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். அவரின் படைப்புகள் இன்றும் வாசகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை காலமானார்.
இந்நிலையில், அவரின் மறைவுச் செய்தி வெளியாகியதும், இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகரராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற செயலாளர் விஜயா தாயன்பன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications