மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்.. பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கான பாடம் என்ன தெரியும்? திருமாவளவன்
சென்னை: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளானது பாஜகவுக்கு எதிரான வாக்குகளைச் சிதறவிடாமல், குறிப்பாக, தலித் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்துகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்பியுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் கூறியுள்ளதாவது: கேரளாவிலுள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள பிரியங்கா காந்திக்கும் ஜார்கண்ட் மாநிலத்தின்ல் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள ஹேமந்த் சோரனுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வயநாடு: வயநாடு இடைத்தேர்தலில் ராகுல் காந்தி பெற்றதை விடக் கூடுதலாக வாக்குகள் பெற்று மகத்தான வெற்றியும் பிரியங்கா காந்தி ஈட்டியுள்ளார். நாடாளுமன்ற மக்களவைக்கு அவர் வரப்போவது இந்தியா கூட்டணிக்கு மேலும் வலிமையைத் தரும். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜார்க்கண்ட்: ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் மீது பொய் வழக்குகளைப் போட்டு ஒன்றிய பாஜக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. குறுக்கு வழியில் அவரது முதலமைச்சர் பதவியைப் பறித்தது. இந்தச் சதிகளையெல்லாம் தாண்டி மக்கள் ஆதரவோடு ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறார். பழங்குடி மக்களின் மகத்தான தலைவரான ஹேமந்த் சோரனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. தலித் வாக்குகள் இந்தியா கூட்டணிக்குச் செல்லாமல் சிதறடிக்கும் விதமாக எல்லா தொகுதிகளிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான விபிஏ கூட்டணியும் வேட்பாளர்களை நிறுத்தின. பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இரண்டையும் எதிர்ப்பதாக அவர்கள் சொல்லிக் கொண்டாலும் "பாஜகவுக்கு ஆதரவாகத் தலித் வாக்குகளைப் பிரிப்பதற்குத் தான் அவர்கள் வேட்பாளர்களை நிறுத்தினார்கள்" என்னும் விமர்சனம் பரவலாக உள்ளது. இது அறிந்தோ அறியாமலோ பாஜக வுக்குத் துணைபோகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பாஜக எதிர்பாராத வெற்றி: மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றியை அது பெற்றுள்ளது. “ இந்த வெற்றி மோடி -அமித்ஷா- அதானி கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி” என உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராவத் கூறியிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஏனெனில், அங்கு நாண்டேட் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அந்த மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் பாஜக வென்றுள்ளது.இது 'மகராஷ்டிராவில் முறைகேடான விதத்தில்தான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது’ என்ற குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது. இதைப் பற்றித் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்.
பாடம் என்ன?: மேலும், இம்முடிவு பாஜகவுக்கு எதிரான வாக்குகளைச் சிதறவிடாமல், குறிப்பாக, தலித் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்துகிறது. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications