உலக நாடுகள் பல ஒப்புக்கொண்ட வண்ணம் பாலஸ்தீனம் தனி நாடாகட்டும் - வைரமுத்து ட்வீட்
சென்னை: ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இது தொடர்பாக வைரமுத்து ட்வீட் பதிவிட்டுள்ளார். எலும்புக் கூடுகளுக்குள் உயிர் ஊறட்டும் கூடாரங்கள் மெல்ல மெல்லக் குடில்களாகட்டும், போர் விமானங்கள் பறந்த வானில் புறாக்கள் பறக்கட்டும். உலக நாடுகள் பல ஒப்புக்கொண்ட வண்ணம் பாலஸ்தீனம் தனி நாடாகட்டும் என்று வைரமுத்து கூறியுள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச நாடுகள் முயற்சித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்ச அமைதி திட்டத்தை அறிவித்தார்.

இஸ்ரேல் ஹமாஸ் போர்
இதை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்தார். இருந்த போதிலும் ஹமாஸ் அமைதி காத்ததால் அதற்கு ட்ரம்ப் 3 நாள் கெடு விதித்தார். இந்த நிலையில்தான், அமைதிக்கு ஹமாஸ், தயாராக இருப்பதாகவும் பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பிற நிபந்தனைகள் சிலவற்றை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் அறிவித்தார்.
இதனால் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், உலக நாடுகள் பல ஒப்புக்கொண்ட வண்ணம் பாலஸ்தீனம் தனி நாடாகட்டும் என்று வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார். இது தொடர்பாக வைரமுத்து கூறியிருப்பதாவது:-
வைரமுத்து கவிதை
67 ஆயிரம் உயிர்களைக்
காவுகொண்ட பின்
இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம்
முடிவுக்கு வருவதாய்த்
தோன்றுகிறது
பாலஸ்தீனத்திற்கே
கூடுதல் இழப்புகள் என்பதால்
இஸ்ரேலின்
விட்டுக்கொடுத்தல்களை
உலகம் வேண்டுகிறது
காசாவின் பிணைக் கைதிகளும்
இஸ்ரேலின் சிறைக் கைதிகளும்
காதலர்கள் பூக்களைப்
பரிமாறிக்கொள்வதைப் போல
மரியாதையாக விடுவிக்கப்பட வேண்டும்
முதலில் பாலஸ்தீனத்திற்கு
உணவுப் பாதையைத்
திறந்துவிடுங்கள்
எலும்புக் கூடுகளுக்குள்
உயிர் ஊறட்டும்
கூடாரங்கள் மெல்ல மெல்லக்
குடில்களாகட்டும்
போர் விமானங்கள்
பறந்த வானில்
புறாக்கள் பறக்கட்டும்
சமாதானத்தை முன்னெடுத்த
அமெரிக்க அதிபர் டிரம்ப்
ஏற்றுக்கொண்ட
இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு
இருவருக்கும்
இந்திய ரோஜாக்கள் பரிசளிக்கிறோம்
உலக நாடுகள் பல
ஒப்புக்கொண்ட வண்ணம்
பாலஸ்தீனம் தனி நாடாகட்டும்
"வெள்ளைப் பூக்கள்
உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி
அமைதிக்காக விடிகவே" என்று பதிவிட்டுள்ளார்.
67 ஆயிரம் உயிர்களைக்
— வைரமுத்து (@Vairamuthu) October 5, 2025
காவுகொண்ட பின்
இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம்
முடிவுக்கு வருவதாய்த்
தோன்றுகிறது
பாலஸ்தீனத்திற்கே
கூடுதல் இழப்புகள் என்பதால்
இஸ்ரேலின்
விட்டுக்கொடுத்தல்களை
உலகம் வேண்டுகிறது
காசாவின் பிணைக் கைதிகளும்
இஸ்ரேலின் சிறைக் கைதிகளும்
காதலர்கள் பூக்களைப்…
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications