இன்று கொடி நாள்.. படை வீரர்களின் நலனை காப்போம்.. பங்களிப்போம்

நாட்டின் உண்மையான கதாநாயகர்களான பாதுகாப்பு படை வீரர்களின் தியாகங்களை இந்த கொடி நாளில் அனைவரும் போற்றி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் உண்மையான கதாநாயகர்களான பாதுகாப்பு படை வீரர்களின் தியாகங்களை இந்த கொடி நாளில் அனைவரும் போற்றி வருகின்றனர். அதே நேரத்தில், அவர்களது குடும்பத்தினருக்கு உதவும் வகையில் இந்த நாளில் நேரடியாக தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.

தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கிய பலர் டிவிட்டரில் பகிர்ந்து வருவதோடு, விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். நம் நாட்டினை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7- ம் தேதி படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது. 1949 ஆம் ஆண்டில் இருந்து இந்த படை வீரர் கொடி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

Let’s contribute to the armed forces flag day fund

வெயில், பனி, மழை என பாராமல் எல்லைகளையும், நீண்ட நெடிய கடல் பகுதிகளையும், அதி நவீன தொழில்நுட்பத்துடன் வானுலக பரப்பை தங்கள் வசம் வைத்திருக்கும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களை பேணிக் காப்பது நமது சமூகக் கடமையாகும்.

கொடிநாளில் விற்கப்படும் கொடி காசு மூலமும், நன்கொடை மூலமும் திரட்டப்படும் நிதி உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது. பள்ளிகளில் மாணவர்கள் பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில், நாட்டிற்காக உயிர் துறந்த பலரையும் நினைவுகூர்ந்து, இந்த நாளில் பலர் தங்களது வீரவணக்கத்தை சமூக வலைதளங்களில் செலுத்துவதோடு, பெருமையை உலகறிய செய்து வருகின்றனர். அந்த வகையில், பங்களிப்பை செலுத்த விரும்புபவர்கள் (Paytm- 8800462175 அல்லது ksb.gov.in ) என்ற வங்கி கணக்கிலும், இணைய வாயிலாகவும் செலுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோடி, கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த படை வீரர்களின் துணிச்சல்பணிக்கு ஈடாகாது என்பதே நிதர்சனம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+