எல்ஐசி பாலிசி.. LIC போட்ட போடு.. யாரந்த சீனியர் ஆபீசர்? மக்களே கவனமா இருங்க.. திடீரென வெளியான அலர்ட்
சென்னை: எல்ஐசி நிறுவனமானது, திடீரென பொதுமக்களுக்காக ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.. தங்கள் வாடிக்கயாளர்களின் நன்மையை கருதி இந்த எச்சரிக்கையை எல்ஐசி விடுத்திருக்கிறது.
எத்தனையோ தனியார் நிறுவனங்கள் காப்பீடு தந்துவருகின்றன.. சேமிப்பு திட்டங்களையும் அறிவித்து வருகின்றன.. ஆனால், பல வருட காலமாகவே, பொதுமக்களால் அதிகம் விரும்பப்படுவதும், நம்பப்படுவதும், எல்ஐசி தரும் திட்டங்களைதான்.

பொதுத்துறை: காரணம், அரசின் பொதுத்துறை நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (Life Insurance Corporation - LIC) நிறுவனம், பொதுமக்களின் நன்மை கருதி, பல்வேறு காப்பீடுகளை வழங்கி கொண்டிருக்கிறது..
அதனால்தான், நம்முடைய நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் எல்ஐசியில் முதலீடு செய்துள்ளதுடன், காப்பீடு செய்து வருவதும் இதே எல்ஐசியில் தான்.. அந்தவகையில் பல பல திட்டங்களுக்கு, புதுபுது சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு தந்து வருகிறது.
இந்நிலையில், எல்ஐசி நிறுவனத்தின் பெயரில், "போலி விளம்பரங்கள்" இணையத்தில் வெளியாகியிருப்பதாக தெரிகிறது... இப்படி போலியான விளம்பரங்களை பதிவிட்டு, மக்களை ஏமாற்றும் வேலையும் அதிகமாகவே நடக்கிறதாம்..
மோசடிபேர்வழிகள்: அதாவது, அச்சுஅசல் எல்ஐசியின் பெயர், அதன் இலச்சினை போன்றவற்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, "எல்ஐசி நிறுவனம்" தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் போலவே, இந்த போலியான விளம்பரங்கள் பரப்புகிறார்களாம்.. இந்த போலி விளம்பரங்களை பார்த்த பொதுமக்களும், உண்மை என்று நம்பி, அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போன் நம்பருக்கும், வெப்சைட் முகவரிக்கும் தொடர்பு கொண்டுள்ளனர்..
இப்படி தொடர்பு கொண்ட நபர்களை அந்த போலி நிறுவனம் ஏமாற்றியிருக்கிறதாம். இதையடுத்து, எல்ஐசி நிறுவனம் அந்த போலி நிறுவனங்களையும் கடுமையாக எச்சரித்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றினையும் எல்ஐசி வெளியிட்டுள்ளது.
வார்னிங்: எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த எச்சரிக்கை பதிவில், "எல்ஐசி பாலிசிதாரர்களும் மக்களும் இதுபோன்ற போலியான விளம்பரங்களின் உண்மை தன்மையை பரிசோதித்துவிட்டு அதன்பின் செயல்பட வேண்டும்.. எல்ஐசி நிறுவன மூத்த அதிகாரிகளின் பெயர்களும் இந்த மோசடி விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே மக்கள் யாரும் இவற்றை நம்பி ஏமாற வேண்டாம். இத்தகைய மோசடி நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எல்ஐசி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
ஏற்கனவே இப்படி பலமுறை, வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்காக எல்.ஐ.சி (Life Insurance Corporation) அதிகாரிகள் அல்லது ஏஜெண்டுகள் என்ற போர்வையில் மோசடி நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன... பெரிய பரிசு, பெரிய வாக்குறுதிகள் கொண்ட போலி திட்டங்களுடன் மக்களை கவர்ந்திழுக்க இப்படியான அழைப்புகள் பெரும்பாலும் செய்யப்படுகின்றன.
அலர்ட்: வாடிக்கையாளர் LIC பராமரிப்பு எண்ணை அழைப்பதன் மூலம் நீங்கள் உண்மையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.. அல்லது அருகிலுள்ள எல்.ஐ.சி கிளைக்கு நேரடியாகவே சென்று அறிந்து கொள்ளலாம்..
ஒருவேளை, அழைப்பு உங்களுக்கு சந்தேகமாக தெரிந்தால், அந்த தொலைபேசி எண்ணுடன் தங்கள் அதிகார வரம்பின் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, எல்.ஐ.சி அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியவாறே உள்ளது நினைவுகூரத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications