நகைக்காக மாற்றுத்திறனாளி பெண்ணை கொலை செய்த பெண்.. ஹைகோர்டில் மேல்முறையீடு.. பரபரப்பு தீர்ப்பு
சென்னை: நகைக்காக மாற்றுத்திறனாளி பெண்ணை கொலை செய்த பெண்ணுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, 10 ஆண்டுகள் சிறை தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வனிதா, கணவரால் கைவிடப்பட்டு பெற்றொருடன் வசித்து வந்தார்.

தனியாக இருந்த வனிதாவுக்கு, வீட்டின் அருகில் இருந்த சர்மிளா பேகம் என்ற பெண் உதவிகளை செய்து வந்தார்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளி பெண் தங்க நகைகள் வைத்திருப்பதை அறிந்து அதை திருட சர்மிளா பேகம் திட்டமிட்டார். அதற்காக வனிதாவுக்கு பூச்சி மருந்து கொடுத்து கொலை செய்து, 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கடந்த 2009 ம் ஆண்டு திருடி சென்றுள்ளார்
இந்த வழக்கில், சர்மிளா பேகத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து கோபிசெட்டி பாளையம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சர்மிளா பேகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர்மோகன் அமர்வு விசாரித்தது.
அப்போது, சர்மிளா பேகம் தரப்பில், கொலை செய்யும் நோக்கம் இல்லை என்றும் நகைகளை திருட மட்டுமே திட்டமிட்டதாகவும்,தற்போது 13 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருவதால், வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சர்மிளா பேகம் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் அடிப்படையில் கொலை செய்யும் நோக்கம் இல்லை எனக் கூறி ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தனர்.
தண்டனைக் காலத்தை ஏற்கனவே அனுபவித்து இருந்தால் அவரை விடுதலை செய்யலாம் எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications