சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடிகை ரஞ்சிதா முதல் கைலாசா வரை சோக்கு சாமியார் நித்தியானந்தா-ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: சர்ச்சைக்குரிய சொகுசு சாமியார் நித்தியானந்தா மரணப்படுக்கையில் இருக்கிறார் என்பதை அவரே உறுதி செய்து சமூகவலைதளப் பதிவுகளாக வெளியிட்டு வருகிறார். நித்தியானந்தா பசி பட்டினியால் செத்து வருவதாக ஒருதரப்பு விமர்சித்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு ஃபுல்டைம் எண்டர்டைமென்ட் சாமியராக உலாவந்தவர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

Recommended Video

    Nithyananda உடல்நிலை கவலைக்கிடம் என வதந்தி! நித்தி கொடுத்த விளக்கம் | Oneindia Tamil

    நித்தியானந்தா எனும் சாமியார் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அறிமுகமானது கதவைத் திற காற்றுவரட்டும் என்கிற வார இதழ் தொடரின்மூலம்தான்.. மீசை முளைக்காத பெண்மைத்தன்மை கொண்ட இளம் சாமியராக அந்த தொடரின் புகைப்படங்களில் காட்சி தந்தார் நித்தியானந்தா. அந்த தொடரில் அவரது பெயர் ஶ்ரீபரமஹம்ச ஶ்ரீ நித்யானந்த சுவாமிகள் என்பதுதான். 2003-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை இந்த தொடர் தொடர்ச்சியாக வெளிவந்தது. இந்த தொடர்கள் நூல்களாகவே வெளியாகவும் செய்தன.

     மூடிய அறைக்குள் தூங்கும் பழக்கமே இல்லையாம்.. கைலாசா எங்கே இருக்கிறது.. துப்பு கொடுத்த நித்தியானந்தா மூடிய அறைக்குள் தூங்கும் பழக்கமே இல்லையாம்.. கைலாசா எங்கே இருக்கிறது.. துப்பு கொடுத்த நித்தியானந்தா

    ரஞ்சிதாவுடன் கும்மாளம்

    ரஞ்சிதாவுடன் கும்மாளம்

    2010-ம் ஆண்டில்தான் நித்தியானந்தா எனும் சாமியாரின் காமகளியாட்டங்கள் அம்பலத்துக்கு வந்தன. கதவை திற காற்று வரட்டும் என்பது கதவை சாத்து காமம் மலரட்டும் என்கிற கதையாக உருமாறிப் போனது. ஆம் பெங்களூரு ஆசிரமத்தில் தமிழ் திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்தியானந்தா உல்லாசமாக உருண்டு புரண்ட வீடியோக்கள் டிவி சேனல்களில் இடைவிடாமல் ஒளிபரப்பானது. அதுவரை பத்தோடு பதினொன்றாக இருந்த நித்தியானந்தா சர்ச்சைகளின் சாமியாராக விவாதப் பொருளானார். அனேகமாக ரஞ்சிதா விவகாரத்துக்குப் பின்னர் நித்தியானந்தா தமக்கு எல்லாமே ஏறுமுகம் என்பதாக காட்டிக் கொண்டார் என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு சரிவை சந்தித்தார்.

    கைது- சிறைவாசம்

    கைது- சிறைவாசம்

    நித்தியானந்தா மீது சரமாரியான புகார்கள்; பலாத்கார கிரிமினல் குற்றங்கள், ஆட் கடத்தல், நில அபகரிப்பு.. என திக்கு திசையெங்கும் நித்தியானந்தா மீது வழக்குகள்.. வேறு என்ன செய்வது? வழக்குகளில் இருந்து தப்பிக்க ஓடி ஓடிப் பதுங்கினார். ஒரு கட்டத்தில் இமயமலைக்கு போய் ஒளிந்து கொண்டார். ஆனால் தேடித் தேடி போன போலீசார் அவரை அல்லேக்காக தூக்கி வந்து சிறையில் போட்டது. கர்நாடகா மாநில போலீசாரின் வழக்குகளை அப்படி ஒன்றும் சர்வ வல்லமை படைத்த நித்தியானந்தாவால் எதிர்கொள்ளவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் கர்நாடகா மடமே இழுத்து மூடப்பட்டது.

    சர்ச்சைகளின் நாயகன்

    சர்ச்சைகளின் நாயகன்

    2012-ம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டார் நித்தியானந்தா. ஆனால் இத்தகைய சோக்கு சாமியாரையா ஆதீனமாக நியமிப்பது என காவிகளிடத்தில் கலகக் குரல் வெடித்தது. இதனால் அறிவிக்கப்பட்ட ஆதீனம் பதவி அப்படியே பறிக்கப்பட்டது. ஆனாலும் அடங்காத நித்தியானந்தா தன்னையே அடுத்த ஆதீனமாக அறிவித்தார். என்னதான் அறிவித்துக் கொண்டாலும் ஒன்றும் வேலைக்கு ஆகாமல் போனது. பின்னர் ஹரித்வாருக்கு போய் பல கோடி ரூபாய் பணம் கொடுத்து அம்மண சாமியார்களின் அங்கத்தின் தலைவராகவும் கூட மகுடம் சூட்டிக் கொண்டு சிரித்தார் நித்தியானந்தா.

    கைலாசாவில் மரணப்படுக்கையில்

    கைலாசாவில் மரணப்படுக்கையில்

    2 ஆண்டுகளுக்கு முன்னர் பல வழக்குகளிலும் நித்தியானந்தா தேடப்பட்டு வந்தார். ஆனால் தப்பி ஓடி தலைமறைவாகிப் போன நித்தியானந்தா எங்கே என்பது மர்மமாகவே போனது. ஒருகட்டத்தில் இண்டர்போல் போலீசார் நோட்டீஸும் அனுப்பினர். ஆனாலும் சிக்காமல் எஸ்கேப்பானர் நித்தியானந்தா. பின்னர் தென் அமெரிக்கா கண்டத்தில் ஏதோ இருடத்தில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி கைலாசா என ஒரு நாட்டை உருவாக்கிவிட்டதாக பீற்றிக் கொண்டார் நித்தியானந்தா. சமூகவலைதளங்களை ஆகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கைலாசா குறித்தும் தமது புருடாக்கள் குறித்தும் இடைவிடாமல் பிரசாரம் செய்தார் நித்தி. கொரோனா காலத்தில் கூட ஏகடியமான பதிவுகளைப் போட்டு வந்தார். அப்படியான சொகுசுப் பேர்வழி சாமியார் நித்தியானந்தா இப்போது மரணப் படுக்கையில்.. இது தொடர்பாக தமது கைப்பட எழுதிய விளக்கங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நித்தி. ஆனாலும் இப்போதும் தமிழக மக்களுக்கு செம காமெடி பீசாகத்தான் நித்தி தெரிகிறார்.. அவருக்கான அனுதாபம் கிஞ்சித்தும் இல்லையே... காரணம் அவர் ஆடிய ஆட்டமும் பேசிய பேச்சும்தான்! ஆம் ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? என்ன என்ன?!

    English summary
    Here is a Life Story on Self Style godman Swami Nithyananda .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X