மக்களே உஷார்.. அடுத்த 3 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை வெளுக்க போகிறது: வானிலை மையம்
சென்னை:தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாகவே பெய்துள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் 2 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு மாவட்டங்களில் கனமழை
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 6ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

6ஆம் தேதி வரை மழை
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், தென்காசி, மதுரை, திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

10 மாவட்டங்களில் மிதமான மழை
வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications