ஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்
Recommended Video
சென்னை: வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும், குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, நாகை, காரைக்கால், திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 சென்டிமீட்டர் மழையும், வேலூர் மாவட்டம் கலவையில் 5 சென்டி மீட்டர் மழையும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
இதற்கிடையில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தண்டம் துறை, வல்லவிளை, நீரோடி, உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் இருப்பதால், மணல் மூட்டைகளை அடுக்கி மக்களே பாதுகாப்பு வேலி அமைத்து வருகின்றனர். கடல் சீற்றம் அதிகரித்தால் வீடுகள் சேதமடையும் அபாயம் இருப்பதாகக் கூறும் கிராம மக்கள், அங்கு தூண்டில் வளைவு அமைக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு!












Click it and Unblock the Notifications