திருப்பரங்குன்றம் வழக்கு! தீர்ப்பில் நீதிபதிகள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை கலக்க கூடாது! சுகிசிவம்
சென்னை: திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திற்கு விளக்கேற்றிய பிறகு மீண்டும் ஒரு விளக்கை ஏற்ற கூடாது. அப்படி ஏற்றினால் நாட்டை ஆளும் அரசனுக்கு ஆபத்து என திருமந்திரத்தில் குறிப்பு உள்ளது என ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி சிவம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எழுதிய 'திருப்பரங்குன்றம் தீர்ப்புகளும் வரலாற்று உண்மைகளும்' என்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி சிவம் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் அவர் பேசுகையில், திருப்பரங்குன்றம் விவகாரம் ஆன்மீகவாதிகள் மட்டுமே பேசியிருக்க வேண்டிய விவகாரம். அது பல பேரிடம் சென்றதுதான் சிக்கல். ஒரு பொய்யை சொல்வது என தீர்மானித்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் பொய் சொல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.
இந்த மண்ணை ஆண்ட பாண்டியர்கள், நாயக்கர்கள், இஸ்லாமியர்கள், ஆங்கிலேயர்கள் என ஒவ்வொருவரும் தங்கள் சுவடை விட்டுச் சென்றுள்ளார்கள். இந்த மலைக்கு உரிய சமணர்கள் மவுனமாக உள்ளனர். காரணம் அவர்கள் வாக்கு அளித்து யாரும் ஆட்சியை பிடிக்க போவதில்லை.
வரலாற்றை திரிக்க நினைப்பவர்கள்தான் எப்போதும் பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டு இருப்பார்கள். திருப்பரங்குன்றம் வழக்கை அணுகிய விதத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் கூடுதல் அக்கறையோடு கையாண்டு இருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
வேறு வகையில் சட்டவிதமாக இந்த வழக்கை கையாண்டு இருக்க வேண்டும். மேல்முறையீட்டுக்கு வழி இருக்கும் போது முடிந்துவிட்டது என்ற கோணத்தில் இதை எடுத்துக் கொள்ள முடியாது.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு, இன்னொரு விளக்கு ஏற்று என சொல்ல முடியாது. இன்னொரு தீபம் ஏற்றினால் நாட்டை ஆளும் அரசனுக்கு ஆகாது என திருமந்திரத்தில் குறிப்பு உள்ளது.
விளக்கேற்றுவதை அப்புறம் வைத்துக் கொள்ளலாம். இன்று நாட்டில் கேஸ் கிடைக்கவில்லை. இது முக்கியமான பிரச்சனை. இத்துடன் இந்தியாவில் இரவு உணவு இல்லாமல் உறங்க போகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எத்தனை சட்டங்கள் போட்டாலும், எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், எவ்வளவு அதிகாரங்கள் பிரயோகம் செய்தாலும் உண்மை ஒரு நாள் எழுந்து நின்று உங்கள் கன்னத்தில் ஓங்கி அறையத்தான் போகிறது என்றார்.
ஹரிபரந்தாமனுடன் தமக்கு நடந்த உரையாடலை சுகி சிவம் சுவாரசியமாகப் பகிர்ந்து கொண்டார். ஒரு நீதிபதி மரண தண்டனை விதித்த பிறகு, மேல்முறையீட்டில் அது ரத்து செய்யப்பட்டால், அந்த நீதிபதி தனிப்பட்ட முறையில் கோபப்பட்டு குற்றவாளியின் உருவ பொம்மையை எரிப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.
நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும்போது தார்மீக இடைவெளியைப் பேண வேண்டுமே தவிர, அதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கலக்கக்கூடாது என்பது அவரது வாதமாக இருந்தது. திருப்பரங்குன்றம் மலையின் வரலாற்றைத் தொட்டுப் பேசிய அவர், அது முருகன் மலையா, சிக்கந்தர் மலையா அல்லது சமணர் குன்றா என்ற சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு, அது இயற்கையின் பேரழகு மிக்க ஒரு மலை என்றார்.
2300 ஆண்டுகளுக்கு முன்பே சமணர்களால் ஆளுமைப்படுத்தப்பட்ட அந்த இடம், காலப்போக்கில் சைவர்கள், நாயக்கர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டிற்கு மாறியது. வரலாற்றை அதன் போக்கில் ஏற்றுக் கொள்பவர்களுக்குப் பிரச்சனை இல்லை, அதைத் திரிக்க நினைப்பவர்களே குழப்பத்தை விளைவிக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் முருகன் வழிபாட்டிற்கும் வடநாட்டின் ஸ்கந்த வழிபாட்டிற்கும் உள்ள நுட்பமான வேறுபாடுகளை அவர் விளக்கினார். வடநாட்டில் பிரம்மச்சாரியாகக் கருதப்படும் கார்த்திகேயன், தமிழகத்தில் காதல் தலைவனான முருகனாகக் கொண்டாடப்படுகிறார். ஒரு காலகட்டத்தில் இவை இரண்டும் இணைந்துவிட்டன என்பதை ஒப்புக்கொண்டால் பல சிக்கல்கள் தீரும் என்றார்.
கோயில் மரபுகள் குறித்துப் பேசுகையில், ஆகம விதிகளின்படி மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் 'ஒன்றே பரம்பொருள்' என்பதைக் குறிப்பதாகும். அங்கு இரண்டாவது தீபத்தை ஏற்றுவது தத்துவ ரீதியாகக் கடவுளைப் பிளவுபடுத்துவதற்குச் சமம் என்றார்.
"உங்களுக்கு யாரைப் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியாது, ஆனால் மரபை மீறினால் அது ஆட்சியாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று அவர் அழுத்தமாகப் பதிவு செய்தார். ஆன்மீகத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது இறைவனை அசிங்கப்படுத்தும் செயல் என்றும் அவர் சாடினார்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக நீடிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மதச்சார்பற்ற நாட்டில் நீதிமன்றங்கள் அரசாங்கத்திற்கு மேலான அதிகாரத்தைக் கொண்டிருக்கும், ஆனால் மதச்சார்புள்ள நாட்டில் அவை அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்டதாக மாறிவிடும் என்ற அபாயத்தை அவர் எச்சரித்தார்.
மக்களின் பசி, குடிநீர் போன்ற அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதை விடுத்து, இத்தகைய தேவையற்ற சர்ச்சைகளில் ஊடகங்களும் நீதிமன்றங்களும் காலத்தை விரயமாக்குவது வருத்தமளிப்பதாகக் கூறினார்.
-
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம்












Click it and Unblock the Notifications