சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அண்ணா, கருணாநிதி வழியில்... சிறப்பான ஆட்சியை ஸ்டாலின் தருவார்.. திமுக தொண்டர்கள் நம்பிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என அண்ணா அறிவாலயத்தில் குவிந்துள்ள திமுக தொண்டர்கள், அண்ணா, கருணாநிதி வழியில் ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியைத் தருவார் என உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

Recommended Video

    Anna Karunanidhi வழியில்... சிறப்பான ஆட்சியை MK Stalin தருவார்-தொண்டர்கள்

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. தமிழகத்தின் 23ஆவது முதலமைச்சராக திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்றது.

    Like Anna and Karunanidhi, Stalin will make the state, says DMK party workers

    கொரோனா பரவல் காரணமாக முதல்வர் பதவி ஏற்கும் விழாவில் தொண்டர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும், முதலமைச்சரான பின் மு.க.ஸ்டாலினை நேரில் காண வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் கொரோனாவையும் பொருட்படுத்தாமல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    மு.க.ஸ்டாலின் அரசுடன் இணைந்து செயல்படுவோம்.. வாருங்கள்.. குஷ்பு அழைப்பு! மு.க.ஸ்டாலின் அரசுடன் இணைந்து செயல்படுவோம்.. வாருங்கள்.. குஷ்பு அழைப்பு!

    அங்கு முதல்வர் ஸ்டாலினைப் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் தொண்டர்கள் உற்சாகத்துடன் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி சிலைகளின் அருகே புகைப்படங்கள் எடுத்துச் செல்கின்றனர்.

    இது குறித்து திமுக தொண்டர்கள் கூறுகையில், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அண்ணா, கருணாநிதிக்கு பிறகு பதவியேற்றுள்ள தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியைத் தருவார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    English summary
    DMK party workers latest about MK Stalin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X