”குடும்ப ஆட்சி” கருணாநிதிக்கு மு.க.ஸ்டாலின்.. அப்படியே மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி..அன்பரசன் ஓபன் டாக்
செங்கல்பட்டு: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருக்கும் போது எப்படி மு.க.ஸ்டாலின் உறுதுணையாக இருந்தாரோ, அதேபோல் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக உதயநிதி இருந்து வருவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். அதேபோல் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையில் மட்டுமல்லாமல், அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்து வருவதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வாரிசு அரசியல் குறித்த பேச்சுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு எதிராக அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

அண்ணாமலை விமர்சனம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேவை அமைச்சராக்கியதால் நடந்த விளைவுகளை திமுக சந்திக்கும் என்றும், தமிழகத்தில் திமுக குடும்ப ஆட்சி நடத்துவதாகவும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்தநாள் விழா திமுகவினரால் நலத்தட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

உதயநிதி பிறந்தநாள்
இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்த நாள் விழாவாக அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா. மோ. அன்பரசன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

குடும்ப ஆட்சி
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பரசன் பேசுகையில், இந்தியாவில் பல மாநில கட்சிகள் உள்ளன. இதுவரை 50 லட்சம் இளைஞர்களை கொண்ட ஒரே இயக்கம் திமுக மட்டும் தான். அமைச்சராகப் பதிவேற்ற உதயநிதி ஸ்டாலின் தனது துறை மட்டுமில்லாமல் அனைத்து துறைகளையும் கவனம் செலுத்தி வருகிறார். திமுக குடும்ப அரசியல் தான் செய்கிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருக்கும் போது எப்படி மு.க.ஸ்டாலின் உறுதுணையாக இருந்தாரோ, அதேபோல் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக உதயநிதி இருந்து வருகிறார் என்று தெரிவித்தார்.

முக ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்
தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்காவது முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளிலேயே உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளே ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. சென்னையில் 6 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. லிஸ்ட் -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச் -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்?












Click it and Unblock the Notifications