இன்னொரு திருப்பூர் சம்பவம்.. பெங்களூர் கீர்த்திக்கு பல லட்சம் கொட்டிய பெற்றோர்.. இப்படியுமா கணவன்
பெங்களூர்: பெங்களூர் பனசங்கரி பனசங்கரியில் சித்து வருபவர் குருபிரசாத். இவருக்கும் கீர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மேலும் இந்த திருமணத்துக்காக கீர்த்தியின் பெற்றோர் ரூ.35 லட்சம் வரை செலவு செய்ததாக கூறப்படுகிறது. திருமணமான முதல் தம்பதி சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் குருபிரசாத் சொந்தமாக வீடு கட்ட முயற்சி செய்துள்ளார். அதற்காக மனைவியிடம் வரதட்சணை வாங்குமாறு வற்புறுத்தினாராம். இதனால் கீர்த்தி எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரதட்சணை என்பது ஒரு காலத்தில் பெண்ணுக்கு சொத்துரிமை வழங்கப்படாத காலக்கட்டத்தில் பெற்றோர்களால் விருப்பப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு அது பல வீடுகளில் கட்டாயமாகியது. ஆனால் உண்மையில் வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம்.

வரதட்சணை கேட்டு பெண்களை கொடுமை செய்தால் சிறையில் உள்ளே போக வேண்டியது வரும். குறிப்பாக வரதட்சணை குற்றம்சாட்டி, பெண் வாழ்க்கையை முடித்துக் கொண்டால், அந்த குடும்பத்தினர் ஏழு வருடம் உள்ளே போக வேண்டியதிருக்கும். அப்படியான சட்டங்கள்இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறையவில்லை. இன்னும் பல ஊர்களில் பெண்கள் வரதட்சணை கேட்டு கொடுமை செய்யப்படுவது தொடர்கிறது.
திருமணத்திற்கு 35 லட்சம்
பெங்களூர் பனசங்கரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் குருபிரசாத். இவருக்கும் கீர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. மேலும் இந்த திருமணத்துக்காக கீர்த்தியின் பெற்றோர் ரூ.35 லட்சம் வரை செலவு செய்தார்களாம்.
சொந்த வீடு ஆசை
இந்தநிலையில் திருமணமான முதல் தம்பதி சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளார்கள். பின்னர் குருபிரசாத் சொந்தமாக வீடு கட்ட முயற்சி செய்து வந்திருக்கிறார். இதில் அவருக்கு அதிக பணம் தேவைப்பட்டதாக தெரிகிறது. ஆகையால் தனது மனைவியிடம் உனது பெற்றோரிடம் பணம் வாங்கி தருமாறு குருபிரசாத் கூறினாராம்.
2 மாதங்களாக கேட்டுள்ளனர்
ஆனால் கீர்த்தி இதனை மறுத்து தனது திருமணத்துக்கே பெற்றோர் அதிக செலவு செய்ததாக கூறினாராம். இருந்த போதிலும் குருபிரசாத் தனக்கு கொடுத்த வரதட்சணை குறைவாக இருந்ததாம். தனக்கு கூடுதல் வரதட்சணை வேண்டும் என்று கேட்டு கடந்த 2 மாதங்களாக கீர்த்தியை குருபிரசாத் துன்புறுத்தி வந்தாராம். இதனால் வேதனை அடைந்த கீர்த்தி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
கீர்த்தி பெற்றோர்
பின்னர் கீர்த்தியின் பெற்றோர் கடந்த மாதம் டிசம்பரில் வங்கி மற்றும் பிற நபர்களிடம் இருந்து கடனாக வாங்கி ரூ.8 லட்சத்தை குருபிரசாத்திடம் கொடுத்து உள்ளனர். அதனை பெற்றுக்கொண்ட குருபிரசாத் தற்போது மீண்டும் கூடுதல் வரதட்சணை வேண்டும் என்று கீர்த்தியை அடித்தார்களாம்.. இருப்பினும் தனது பெற்றோரின் நிலையை அறிந்த கீர்த்தி பணம் கேட்க முடியாமல் மனமுடைந்து காணப்பட்டாராம்.
மருத்துவமனையில் கீர்த்தி
இதுகுறித்து கடந்த 24-ந்தேதி இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கீர்த்தி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த கணவர் உடனடியாக கீர்த்தியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு கீர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
கணவனை பிடித்து விசாரணை
இதையடுத்து கீர்த்தியின் பெற்றோர், பனசங்கரி போலீசில் வரதட்சணை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், மகளின் சாவுக்கு கணவர் குருபிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவர் குருபிரசாத்தை பிடித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications