Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைநகரிலேயே தாமரை மலரும்போது தமிழகத்தில் மலராதா.. ரைமிங்கில் அசத்திய தமிழிசை..திருமாவளவனுக்கு பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் டெல்லியிலேயே தாமரை மலரும் போது தமிழ்நாட்டில் மலராதா என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியால் ஒரு தேர்தலை கூட ஒற்றுமையாக எதிர்கொள்ள முடியவில்லை என்று கூறிய அவர், திருமாவளவனுக்கு இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருப்பதாக பதிலடி கொடுத்துள்ளார்.

27 ஆண்டுகளுக்கு பின் பாஜக தலைநகர் டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இந்த சட்டசபைத் தேர்தலில் 47 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி 23 தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது. அக்கட்சியின் முக்கிய தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் தோல்வியை தழுவியுள்ளனர்.

delhi election 2025 delhi election result 2025 arvind kejriwal 2025 2025

1997ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் பாஜக டெல்லியை கைப்பற்றி இருப்பதால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னை கமலாலயத்திலும் பாஜக தொண்டர்களின் கொண்டாட்டம் களைக்கட்டியது. பாஜக மூத்த தலைவரான தமிழிசை செளந்தரராஜன் பட்டாசு வெடித்து கொண்டாடினார்.

இதனைத் தொடர்ந்து தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாஜக தலைநகரில் வெற்றிபெற்றதை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மாநிலத் தலைவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். டெல்லியில் பாஜக தலைநிமிர்கிறது. ஆம் ஆத்மி கட்சி தலை குனிகிறது. காங்கிரஸ் நிலை குலைகிறது.

என்னை பொறுத்தவரை இது மிகப்பெரிய வெற்றி. வளர்ச்சிக்கான திட்டங்களை பாஜக முன்னெடுத்து செல்லும் என்பதால், டெல்லி மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளார்கள். அதனால் தலைநகரிலேயே தாமரை மலரும் போது, தமிழ்நாட்டிலும் தாமரை மலரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு கிடைத்துள்ளது. இதேபோல் 2026ல் தமிழகத்தில் தாமரை மலர்ந்த பின் நிச்சயம் கொண்டாடுவோம்.

ஊழலை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் செய்து சிறைக்கு சென்றார். வளர்ச்சியை தருவோம் என்றார்.. ஆனால் டெல்லியில் எந்த வளர்ச்சியையும் கொடுக்கவில்லை. சுற்றுச்சூழலை காப்போம் என்று கூறினார்.. ஆனால் அதிக மாசு தான் டெல்லியில் இருந்தது. மின்சாரம், தண்ணீர் என்று பிரச்சனைகள் மோசமாகி கொண்டே சென்றது.

முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்துள்ளார். இந்த வெற்றியால் திமுக ரொம்ப கவலைப்பட வேண்டும். ஏனென்றால் அவர்களின் கூட்டணி ஒரு தேர்தலை கூட ஒற்றுமையாக எதிர்கொள்ளவில்லை. இந்த தேர்தலில் காங்கிரஸ் எந்த தொகுதியிலும் வெல்லவில்லை. ஹாட்ரிக் ஜீரோவை பெற்றிருக்கிறார்கள்.

திமுக பங்கெடுத்த இந்தியா கூட்டணி தோல்வியடைந்ததால், ஈரோடு வெற்றியையும் கொண்டாட முடியவில்லை. பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்கள் அதிகம் வாழும் மக்கள் பகுதிகளில் பாஜக வென்றுள்ளது. இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் 4ல் வென்றுள்ளோம். அதனால் பாஜக இந்த மதத்திற்கு எதிரானவர்கள் என்ற பொய் பிரச்சாரம் எடுபடாது.

திருமாவளவனுக்கு வேங்கையவயல் அதிர்ச்சியை தாண்டி தலைநகர் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை கொடுத்து கொண்டிருக்கிறதாம். வேங்கைவயலில் இன்னும் அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. தலைநகரை நாங்கள் பார்த்து கொள்கிறோம். அவருக்கு இந்தியா கூட்டணி தோற்றது தான் அதிர்ச்சி. திருமாவளவன் தன்னை பலப்படுத்தி கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்னும் அதிர்ச்சிகள் வரும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+