எம்ஜிஆருக்கு சிறுநீரகம் தானம் செய்த அண்ணன் மகள் லீலாவதி சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்
கடுமையான உடல் நல பாதிப்புக்குள்ளான எம்ஜிஆர் புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிர் பிழைக்க தனது கிட்னியை தானமாக தந்து ஒரு கிட்னியுடன் 37 ஆண்டுகள் உயிர்வாழ்ந்த எம்ஜிஆரின் அண்ணன் சக்ரபாணியின் மகள் லீலாவதி (71) உடல்நலக்குறைவால் நேற்றிரவு காலமானார்.

எம்ஜிஆர் உடல் நிலை தமிழகமே அழுதது
தமிழக முதல்வராக 1977-ல் பதவி ஏற்ற எம்ஜிஆர் தனது 60 வது வயது வரை ஆரோக்கியமாக இருந்தார். அரசியல் சூழல் அதிக உழைப்பு அவர் உடல் நலனை பாதித்தது. 1984 அக்டோபர் 5ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் எம்ஜிஆர் அனுமதிக்கப்பட்டார். அப்போது, எம்ஜிஆருக்கு காய்ச்சல், சளி மற்றும் லேசான ஆஸ்துமா பிரச்சனை இருப்பதாக அப்போலோ மருத்துவமனையின் செய்திக் குறிப்பு தெரிவித்தது.
எம்ஜிஆர் உடல் நிலைக்குறித்து அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் கவலை அடைந்தனர். தமிழகம் முழுவதும் தொண்டர்கள் கண்ணீர் சிந்தினர், ஆலயம் தோறும் பூஜைகள், பிரார்த்தனைகள் நடந்தது. பிரதமர் இந்திரா நேரில் வந்து பார்த்தார்.

திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட எம்ஜிஆர்
1984 அக்டோபர் 13ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், எம்ஜிஆர் உடல்நிலை தேறிவருவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அன்று நள்ளிரவு எம்ஜிஆருக்கு பக்கவாதம் தாக்கியது. இதனைத் தொடர்ந்து அமைச்சர்களாக இருந்த ஹண்டே, ஆர்.எம்.வீரப்பன், நெடுஞ்செழியன் ஆகியோர் ஆலோசனை நடத்தி எம்ஜிஆரின் உடல்நிலை பாதிப்பு குறித்தும் அவர் சுயநினைவு இல்லாமல் இருப்பதையும் வெளிப்படுத்தினர்.

அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட எம்ஜிஆர்
அப்போலோவில் அமெரிக்க மருத்துவர் குழு எம்ஜிஆரை சோதித்தது, ஜப்பான் டாக்டர் கானு சென்னை வந்து எம்ஜிஆர் உடல் நிலையை சோதித்தார். மருத்துவர்கள் பரிந்துரைப்படி 1984 நவம்பர் 5ஆம் தேதி எம்ஜிஆர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எம்ஜிஆருடன் ஜானகி அம்மையார், ஹண்டே உட்பட 21 பேர் தனி விமானத்தில் அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்குச் சென்றனர்.
எம்ஜிஆருக்கு உடனடியாக சிறுநீரகம் தேவைப்படுகிறது என்பதை அறிந்த கேரளாவில் வசித்த எம்ஜிஆரின் அண்ணன் எம்ஜி. சக்ரபாணியின் மகள் லீலாவதி உடனடியாக தான் சிறுநீரக தானம் செய்வதாக அறிவித்து எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் செய்தார். இதனால் எம்ஜிஆர் பூரண நலம் பெற்றார். 1985 பிப்ரவரி 4ஆம் தேதி 3 ஆம் முறையாக முதல்வராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் தமிழகம் திரும்பினார் எம்ஜிஆர். அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஓடோடி வந்து தானம் செய்த லீலாவதி எம்ஜிஆர் நெகிழ்ச்சி
எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் அளித்தது லீலாவதி எனும் தகவல் எம்ஜிஆருக்கு உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. பின்னர் தெரிந்துக்கொண்ட எம்ஜிஆர் அவரை அழைத்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். லீலாவதியை அதிமுக தொண்டர்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.
இந்நிலையில் கிட்னி தானம் செய்து ஒற்றைக் கிட்னியுடன் 37 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் லீலாவதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 2 மணி அளவில் காலமானார். லீலாவதியின் மரணம் அதிமுக தொண்டர்கள், எம்ஜிஆர் விசுவாசிகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துள்ளார்
அவரது இரங்கல் செய்தி வருமாறு:
"எம்ஜிஆர் 1984-ல் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவருக்குத் தன்னுடைய சிறுநீரகத்தை அளித்து, எம்ஜிஆரை வாழவைத்த லீலாவதி அம்மையார் 37 ஆண்டுகள் இப்பூவுலகில் ஒரு சிறுநீரகத்தோடு வாழ்ந்து இன்று இயற்கை எய்தியதை அறிந்த எம்.ஜி.ஆரின் கோடானுகோடி அன்புத் தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களும் மிகுந்த வேதனை கொள்கிறது.
லீலாவதி அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும் தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்''.
இவ்வாறு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டோர் நேரில் சென்று லீலாவதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். லீலாவதி சில ஆண்டுகளுக்கு முன் பாஜாகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications