பெட்டி பெட்டியாக பிடிபட்ட மது பாட்டில்கள்.. 3 நாள் டாஸ்மாக் லீவ்.. கள்ளச்சந்தையில் விற்பனையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மினி வேனில் கொண்டு செல்லப்பட்ட மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. மேலும் நேற்று முதல் நாளை வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. 3 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் காலை முதலே மதுப்பிரியர்கள் 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

Liquor bottles worth 3 lakhs seized in chennai amid tasmac shops closure

இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. நேற்று முன்தினம் மட்டும் தமிழகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். டாஸ்மாக் கடைகளில் தினசரி மது விற்பனை ரூ.150 கோடி அளவுக்கு இருக்கும். ஆனால் நேற்று முன்தினம் இரண்டரை மடங்கு அளவுக்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றது.

ஒரு சிலர் கூடுதலாக மதுபாட்டில்கள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது என்பதால் ஒரு நபருக்கு 4 குவார்ட்டர் மட்டும் வழங்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. அதனை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை மடக்கி, பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மினி வேன் ஓட்டுனரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மது பாட்டில்களை அவர் பம்மலில் இருந்து கோவிலாஞ்சேரி பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகள் விடுமுறை என்பதால் கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டதா? அந்த மதுபானங்கள் எந்த மதுபான கடைக்கு சொந்தமானவை என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+